(1)
களையும் வல்வினை அஞ்சல் நெஞ்சே, கருதார்புரம்
உளையும் பூசல் செய்தான், உயர் மால்வரை நல்விலா
வளைய வெஞ்சரம் வாங்கி எய்தான், மதுத் தும்பிவண்டு
அளையும் கொன்றையந்தார் மழபாடியுள் அண்ணலே
(2)
காச்சிலாத பொன்னோக்கும் கன வயிரத்திரள்
ஆச்சிலாத பளிங்கினன், நஞ்சுமுன் ஆடினான்
பேச்சினால் உமக்காவதென் பேதைகாள் பேணுமின்
வாச்ச மாளிகைசூழ் மழபாடியை வாழ்த்துமே
(3)
உரங்கெடுப்பவன், உம்பர்கள்ஆயவர் தங்களைப்
பரங்கெடுப்பவன், நஞ்சை உண்டு, பகலோன் தனை
முரண் கெடுப்பவன், முப்புரம் தீயெழச் செற்றுமுன்
வரம் கொடுப்பவன் மாமழபாடியுள் வள்ளலே
(4)
பள்ளமார் சடையில் புடையே அடையப் புனல்
வெள்ளம் ஆதரித்தான், விடையேறிய வேதியன்
வள்ளல், மாமழபாடியுள் மேய மருந்தினை
உள்ளம் ஆதரிமின் வினையாயின ஓயவே
(5)
தேனுலாமலர் கொண்டு மெய்த்தேவர்கள் சித்தர்கள்
பால்நெய் அஞ்சுடன் ஆட்டமுன் ஆடிய பால்வணன்
வான நாடர்கள் கைதொழு மாமழபாடி எம்
கோனை நாள்தொறும் கும்பிடவே குறி கூடுமே
(6)
தெரிந்தவன் புர மூன்றுடன் மாட்டிய சேவகன்
பரிந்து கைதொழுவார்அவர் தம்மனம் பாவினான்
வரிந்த வெஞ்சிலை ஒன்றுடையான், மழபாடியைப்
புரிந்து கைதொழுமின் வினையாயின போகுமே
(7)
சந்தவார் குழலாள்உமை தன்னொரு கூறுடை
எந்தையான், இமையாத முக்கண்ணினன், எம்பிரான்
மைந்தன் வார்பொழில்சூழ் மழபாடி மருந்தினைச்
சிந்தியா எழுவார் வினையாயின தேயுமே
(8)
இரக்கமொன்றும் இலான் இறையான் திருமாமலை
உரக்கையால் எடுத்தான்தன் தொல்முடி பத்திற
விரல்தலை நிறுவி உமையாளொடு மேயவன்
வரத்தையே கொடுக்கும் மழபாடியுள் வள்ளலே
(9)
ஆலமுண்டமுதம் அமரர்க்கு அருள் அண்ணலார்
காலனார் உயிர் வீட்டிய மாமணி கண்டனார்
சால நல்லடியார் தவத்தார்களும் சார்விட
மாலயன் வணங்கும் மழபாடிஎம் மைந்தனே
(10)
கலியின் வல்லமணும், கருஞ்சாக்கியப் பேய்களும்
நலியுநாள் கெடுத்தாண்ட என்நாதனார் வாழ்பதி
பலியும் பாட்டொடு பண்முழவும் பல ஓசையும்
மலியு மாமழபாடியை வாழ்த்தி வணங்குமே
(11)
மலியு மாளிகை சூழ் மழபாடியுள் வள்ளலைக்
கலிசெய் மாமதில் சூழ் கடற்காழிக் கவுணியன்
***
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...