திருப்பூவணம் – சுந்தரர் தேவாரம்:

<– திருப்பூவணம்

(1)
திருவுடையார் திருமால் அயனாலும்
உருவுடையார் உமையாளை ஒர் பாகம்
பரிவுடையார் அடைவார் வினை தீர்க்கும்
புரிவுடையார் உறை பூவணம் ஈதோ
(2)
எண்ணியிருந்து கிடந்தும் நடந்தும்
அண்ணலெனா நினைவார் வினை தீர்ப்பார்
பண்ணிசையார் மொழியார் பலர் பாடப்
புண்ணியனார் உறை பூவணம் ஈதோ
(3)
தெள்ளிய பேய்பல பூதம் அவற்றொடு
நள்ளிருள் நட்டமதாடல் நவின்றோர்
புள்ளுவராகும் அவர்க்கவர் தாமும்
புள்ளுவனார் உறை பூவணம் ஈதோ
(4)
நிலனுடை மான்மறி கையது தெய்வக்
கனலுடை மாமழு ஏந்தியோர் கையில்
அனலுடையார் அழகார்தரு சென்னிப்
புனலுடையார் உறை பூவணம் ஈதோ
(5)
நடையுடை நல்லெருதேறுவர், நல்லார்
கடைகடை தோறிடும் இல்பலி என்பார்
துடியிடை நன்மடவாளொடு மார்பில்
பொடிஅணிவார் உறை பூவணம் ஈதோ
(6)
மின்னனையாள் திருமேனி விளங்கஓர்
தன்னமர் பாகமதாகிய சங்கரன்
முன்நினையார் புரம் மூன்றெரி ஊட்டிய
பொன்னனையான் உறை பூவணம் ஈதோ
(7)
மிக்கிறையே அவன் துன்மதியாலிட
நக்கிறையே விரலால் இறவூன்றி
நெக்கிறையே நினைவார் தனி நெஞ்சம்
புக்குறைவான் உறை பூவணம் ஈதோ
(8)
(9)
(10)
சீரில் மிகப்பொலியும் திருப்பூவணம்
ஆர விருப்பிடமா உறைவான் தனை
ஊரன் உரைத்த சொல் மாலைகள் பத்திவை
பாரில் உரைப்பவர் பாவம் அறுப்பரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page