தனித் திருக்குறுந்தொகை:
(1)
ஏயிலானை, எனிச்சை அகம்படிக்
கோயிலானைக், குணப்பெரும் குன்றினை
வாயிலானை, மனோன்மனியைப் பெற்ற
தாயிலானைத் தழுவுமென் ஆவியே
(2)
முன்னை ஞானமுதல் தனி வித்தினைப்
பின்னை ஞானப் பிறங்கு சடையனை
என்னை ஞானத்திருள் அறுத்தாண்டவன்
தன்னை ஞானத் தளையிட்டு வைப்பனே
(3)
ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள்
ஞானத்தால் தொழுவேன் உனை நானலேன்
ஞானத்தால் தொழுவார்கள் தொழக்கண்டு
ஞானத்தாய் உனை நானும் தொழுவனே
(4)
புழுவுக்கும் குணம் நான்கு எனக்கும்அதே
புழுவுக்கிங்கு எனக்குள்ள பொல்லாங்கில்லை
புழுவினும் கடையேன் புனிதன்தமர்
குழுவுக்கு எவ்விடத்தேன் சென்று கூடவே
(5)
மலையே வந்து விழினும் மனிதர்காள்
நிலையில் நின்று கலங்கப் பெறுதிரேல்
தலைவனாகிய ஈசன் தமர்களைக்
கொலைசெய் யானை தான் கொன்றிடுகிற்குமே
(6)
கற்றுக் கொள்வன வாயுள நாவுள
இட்டுக் கொள்வன பூவுள நீருள
கற்றைச் செஞ்சடையான் உளன், நாமுளோம்
எற்றுக்கோ நமனால் முனிவுண்பதே
(7)
மனிதர்காள் இங்கே வம் ஒன்று சொல்லுகேன்
கனிதந்தால் கனியுண்ணவும் வல்லிரே
புனிதன் பொற்கழல் ஈசன்எனும் கனி
இனிது சாலவும் ஏசற்றவர்கட்கே
(8)
என்னை ஏதும் அறிந்திலன் எம்பிரான்
தன்னை நானுமுன் ஏதும் அறிந்திலேன்
என்னைத் தன்அடியான் என்றறிதலும்
தன்னை நானும் பிரானென்று அறிந்தெனே
(9)
…
(10)
தெள்ளத் தேறித் தெளிந்து தித்திப்பதோர்
உள்ளத் தேறல் அமுத ஒளிவெளி
கள்ளத்தேன் கடியேன் கவலைக்கடல்
வெள்ளத் தேனுக்கெவ்வாறு விளைந்ததே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...