திருஅங்கமாலை:
(1)
தலையே நீவணங்காய் – தலை
மாலை தலைக்கணிந்து
தலையாலே பலிதேரும் தலைவனைத்
தலையே நீ வணங்காய்
(2)
கண்காள் காண்மின்களோ – கடல்
நஞ்சுண்ட கண்டன் தன்னை
எண்தோள் வீசி நின்றாடும் பிரான் தன்னைக்
கண்காள் காண்மின்களோ
(3)
செவிகாள் கேண்மின்களோ – சிவன்
எம்இறை செம்பவள
எரிபோல் மேனிப்பிரான் திறம்எப்போதும்
செவிகாள் கேண்மின்களோ
(4)
மூக்கே நீமுரலாய் – முது
காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
மூக்கே நீமுரலாய்
(5)
வாயே வாழ்த்து கண்டாய் – மத
யானை உரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத்தாடும் பிரான் தன்னை
வாயே வாழ்த்து கண்டாய்
(6)
நெஞ்சே நீநினையாய் – நிமிர்
புன்சடை நின்மலனை
மஞ்சாடும் மலைமங்கை மணாளனை
நெஞ்சே நீ நினையாய்
(7)
கைகாள் கூப்பித் தொழீர் – கடி
மாமலர் தூவி நின்று
பைவாய்ப் பாம்பரை ஆர்த்த பரமனைக்
கைகாள் கூப்பித் தொழீர்
(8)
ஆக்கையால் பயனென் – அரன்
கோயில் வலம்வந்து
பூக்கையால் ஆட்டிப் போற்றி என்னாத
இவ்வாக்கையால் பயனென்
(9)
கால்களால் பயனென் – கறைக்
கண்டன் உறைகோயில்
கோலக் கோபுரக் கோகரணம் சூழாக்
கால்களால் பயனென்
(10)
உற்றார் ஆருளரோ – உயிர்
கொண்டு போம் பொழுது
குற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக்கு
உற்றார் ஆருளரோ
(11)
இறுமாந்திருப்பன் கொலோ – ஈசன்
பல்கணத்தெண்ணப்பட்டுச்
சிறுமான்ஏந்தி தன் சேவடிக் கீழ்ச் சென்றங்கு
இறுமாந்திருப்பன் கொலோ
(12)
தேடிக் கண்டு கொண்டேன் – திரு
மாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுளே
தேடிக் கண்டு கொண்டேன்
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...