திருப்பூந்துருத்தி – அப்பர் தேவாரம் (2)

<– திருப்பூந்துருத்தி

 

(1)
கொடிகொள் செல்வ விழாக் குணலைஅறாக்
கடிகொள் பூம்பொழில் கச்சி ஏகம்பனார்
பொடிகள் பூசிய பூந்துருத்தி நகர்
அடிகள் சேவடிக்கீழ் நாம் இருப்பதே

(2)
ஆர்த்த தோலுடை கட்டியோர் வேடனாய்ப்
பார்த்தனோடு படைதொடும் ஆகிலும்
பூத்த நீள்பொழில் பூந்துருத்தி நகர்த்
தீர்த்தன் சேவடிக்கீழ் நாம் இருப்பதே

(3)
மாதினை மதித்தான் ஒரு பாகமாக்
காதலால் கரந்தான் சடைக் கங்கையைப்
பூத நாயகன் பூந்துருத்தி நகர்க்கு
ஆதி சேவடிக்கீழ் நாம் இருப்பதே

(4)
மூவனாய் முதலாய் இவ்வுலகெலாம்
காவனாய்க் கடும் காலனைக் காய்ந்தவன்
பூவின் நாயகன், பூந்துருத்தி நகர்த்
தேவன் சேவடிக்கீழ் நாம் இருப்பதே

(5)
செம்பொனே ஒக்கும் மேனியன், தேசத்தில்
உம்பரார் அவரோடு அங்கிருக்கிலும்
பொன் பொன்னார் செல்வப் பூந்துருத்தி நகர்
நம்பன் சேவடிக்கீழ் நாம் இருப்பதே

(6)
வல்லம் பேசி வலிசெய் மூன்றூரினைக்
கொல்லம் பேசிக் கொடுஞ்சரம் நூறினான்
புல்லம் பேசியும் பூந்துருத்தி நகர்ச்
செல்வன் சேவடிக்கீழ் நாம் இருப்பதே

(7)
ஒருத்தனாய் உலகேழும் தொழநின்று
பருத்த பாம்பொடு பால்மதி கங்கையும்
பொருத்தனாகிலும் பூந்துருத்தி நகர்த்
திருத்தன் சேவடிக்கீழ் நாம் இருப்பதே

(8)
அதிரர் தேவர் இயக்கர் விச்சாதரர்
கருத நின்றவர் காண்பரிதாயினான்
பொருத நீர்வரு பூந்துருத்தி நகர்ச்
சதுரன் சேவடிக்கீழ் நாம் இருப்பதே

(9)
செதுகறா மனத்தார் புறங்கூறினும்
கொதுகறாக் கண்ணி நோன்பிகள் கூறினும்
பொதுவில் நாயகன் பூந்துருத்தி நகர்க்கு
அதிபன் சேவடிக்கீழ் நாம் இருப்பதே

(10)
துடித்த தோள்வலி வாளரக்கன் தனைப்
பிடித்த கைஞ்ஞெரிந்துற்றன கண்ணெலாம்
பொடிக்க ஊன்றிய பூந்துருத்தி நகர்ப்
படிகொள் சேவடிக்கீழ் நாம் இருப்பதே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page