(1)
பகைத்திட்டார் புரங்கள் மூன்றும் பாறிநீறாகி வீழப்
புகைத்திட்ட தேவர் கோவே, பொறியிலேன் உடலந்தன்னுள்
அகைத்திட்டங்கதனை நாளும் ஐவர் கொண்டாட்ட ஆடித்
திகைத்திட்டேன் செய்வதென்னே திருப்புகலூரனீரே
(2)
மையரி மதர்த்த ஒண்கண் மாதரார் வலையில் பட்டுக்
கையெரி சூலமேந்தும் கடவுளை நினைய மாட்டேன்
ஐநெரிந்தகமிடற்றே அடைக்கும் போது ஆவியார் தாம்
செய்வதொன்றறிய மாட்டேன் திருப்புகலூரனீரே
(3)
முப்பது முப்பத்தாறு முப்பதும் இடுகுரம்பை
அப்பர்போல் ஐவர் வந்து அதுதருகிது விடென்று
ஒப்பவே நலியலுற்றால் உய்யுமாறறிய மாட்டேன்
செப்பமே திகழுமேனித் திருப்புகலூரனீரே
(4)
பொறியிலா வழுக்கை ஓம்பிப் பொய்யினை மெய்யென்றெண்ணி
நெறியலா நெறிகள் சென்றேன் நீதனேன் நீதியேதும்
அறிவிலேன் அமரர் கோவே அமுதினை மனனில் வைக்கும்
செறிவிலேன் செய்வதென்னே திருப்புகலூரனீரே
(5)
அளியினார் குழலினார்கள் அவர்களுக்கன்பதாகிக்
களியினார் பாடலோவாக் கடவூர் வீரட்டமென்னும்
தளியினார் பாத நாளும் நினைவிலாத் தகவில் நெஞ்சம்
தெளிவிலேன் செய்வதென்னே திருப்புகலூரனீரே
(6)
இலவினார் மாதர் பாலே இசைந்துநான் இருந்து பின்னும்
நிலவுநாள் பலவென்றெண்ணி நீதனேன் ஆதிஉன்னை
உலவிநான் உள்க மாட்டேன் உன்னடி பரவு ஞானம்
செலவிலேன் செய்வதென்னே திருப்புகலூரனீரே
(7)
காத்திலேன் இரண்டு மூன்றும் கல்வியேல் இல்லையென்பால்
வாய்த்திலேன் அடிமை தன்னுள், வாய்மையால் தூயேனல்லேன்
பார்த்தனுக்கருள்கள் செய்த பரமனே பரவுவார்கள்
தீர்த்தமே திகழும் பொய்கைத் திருப்புகலூரனீரே
(8)
நீருமாய்த் தீயுமாகி நிலனுமாய் விசும்புமாகி
ஏருடைக் கதிர்களாகி இமையவர் இறைஞ்ச நின்றார்
ஆய்வதற்கரியராகி அங்கங்கே ஆடுகின்ற
தேவர்க்கும் தேவராவர் திருப்புகலூரனாரே
(9)
மெய்யுளே விளக்கையேற்றி வேண்டளவுயரத் தூண்டி
உய்வதோர் உபாயம் பற்றி உகக்கின்றேன் உகவா வண்ணம்
ஐவரை அகத்தே வைத்தீர் அவர்களே வலியர் சாலச்
செய்வதொன்றறிய மாட்டேன் திருப்புகலூரனீரே
(10)
அருவரை தாங்கினானும், அருமறை ஆதியானும்
இருவரும் அறிய மாட்டா ஈசனார் இலங்கை வேந்தன்
கருவரையெடுத்த ஞான்று கண்வழி குருதி சோரத்
திருவிரல் சிறிது வைத்தார் திருப்புகலூரனாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...