தனிக் குறுந்தொகை:
(1)
தொண்டனேன் பட்டதென்னே தூய காவிரியின் நன்னீர்
கொண்டு இருக்கோதி ஆட்டிக் குங்குமக் குழம்பு சாத்தி
இண்டை கொண்டேற நோக்கி ஈசனை எம்பிரானைக்
கண்டனைக் கண்டிராதே காலத்தைக் கழித்தவாறே
(2)
பின்னிலேன் முன்னிலேன் நான் பிறப்பறுத்தருள் செய்வானே
என்னிலேன் ஆயினேனான் இளங்கதிர்ப் பயலைத் திங்கள்
சின்னிலா வெறிக்கும் சென்னிச் சிவபுரத்தமரரேறே
நின்னலால் களைகண்ஆரே நீறுசேர் அகலத்தானே
(3)
கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்துப் போக்கித்
தெள்ளியேனாகி நின்று தேடினேன் நாடிக் கண்டேன்
உள்குவார் உள்கிற்றெல்லாம் உடனிருந்தறிதிஎன்று
வெள்கினேன் வெள்கி நானும் விலாவிறச் சிரித்திட்டேனே
(4)
உடம்பெனும் மனைஅகத்துள்ளமே தகளியாக
மடம்படும் உணர்நெய்யட்டி உயிரெனும் திரிமயக்கி
இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே
(5)
வஞ்சப்பெண் அரங்கு கோயில் வாளெயிற்றறரவம் துஞ்சா
வஞ்சப்பெண் இருந்த சூழல் வான்தவழ் மதியம் தோயும்
வஞ்சப்பெண் வாழ்க்கையாளன் வாழ்வினை வாழலுற்று
வஞ்சப்பெண் உறக்கமானேன் வஞ்சனேன்என் செய்கேனே
(6)
உள்குவார் உள்ளத்தானை, உணர்வெனும் பெருமையானை
உள்கினேன் நானும் காண்பான் உருகினேன் ஊறியூறி
எள்கினேன் எந்தை பெம்மான் இருதலை மின்னுகின்ற
கொள்ளிமேல் எறும்பென் உள்ளம் எங்ஙனம் கூடுமாறே
(7)
மோத்தையைக் கண்ட காக்கை போல வல்வினைகள் மொய்த்துன்
வார்த்தையைப் பேசஒட்டா மயக்கநான் மயங்குகின்றேன்
சீத்தையைச் சிதம்பு தன்னைச் செடிகொள்நோய் வடிவொன்றில்லா
ஊத்தையைக் கழிக்கும் வண்ணம் உணர்வுதா உலக மூர்த்தீ
(8)
அங்கத்தை மண்ணுக்காக்கி ஆர்வத்தை உனக்கே தந்து
பங்கத்தைப் போகமாற்றிப் பாவித்தேன் பரமா நின்னைச்
சங்கொத்த மேனிச் செல்வா சாதனாய் நாயேன்உன்னை
எங்குற்றாய் என்ற போதா இங்குற்றேன் என்கண்டாயே
(9)
வெள்ளநீர்ச் சடையனார் தாம் வினவுவார் போல வந்தென்
உள்ளமே புகுந்து நின்றார்க்குறங்கு நான் புடைகள் போந்து
கள்ளரோ புகுந்தீர் என்னக் கலந்துதான் நோக்கிநக்கு
வெள்ளரோம் என்று நின்றார் விளங்கிளம் பிறையனாரே
(10)
பெருவிரல் இறைதான் ஊன்றப் பிறையெயில் இலங்க அங்காந்து
அருவரைஅனைய தோளான் அரக்கன் அன்றலறி வீழ்ந்தான்
இருவரும் ஒருவனாய உருவம் அங்குடைய வள்ளல்
திருவடி சுமந்து கொண்டு காண்க நான் திரியுமாறே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...