திருப்புகலூர் – அப்பர் தேவாரம் (4):

<– திருப்புகலூர்

(1)
தன்னைச் சரணென்று தாளடைந்தேன் தன் அடியடையப்
புன்னைப் பொழில் புகலூர் அண்ணல் செய்வன கேண்மின்களோ
என்னைப் பிறப்பறுத்தென் வினை கட்டறுத்து, ஏழ்நரகத்து
என்னைக் கிடக்கலொட்டான் சிவலோகத்திருத்திடுமே
(2)
பொன்னை வகுத்தன்ன மேனியனே, புணர் மென்முலையாள்
தன்னை வகுத்தன்ன பாகத்தனே, தமியேற்கிரங்காய்
புன்னை மலர்த்தலை வண்டுறங்கும் புகலூர் அரசே
என்னை வகுத்திலையேல் இடும்பைக்கிடம் யாது சொல்லே
(3)
பொன்னன வார்சடைக் கொன்றையினாய், புகலூர் அரசே
மன்னுள தேவர்கள் தேடு மருந்தே, வலஞ்சுழியாய்
என்னளவே உனக்காட்பட்டு இடைக்கலத்தே கிடப்பார்
உன்னளவே எனக்கொன்றும் இரங்காத உத்தமனே
(4)
(5)
(6)
(7)
(8)
(9)
(10)
ஓணப் பிரானும் ஒளிர்மா மலர்மிசை உத்தமனும்
காணப் பராவியும் காண்கின்றிலர், கர நாலைந்துடைத்
தோணப் பிரானை வலிதொலைத்தோன், தொல்லை நீர்ப்புகலூர்க்
கோணப் பிரானைக் குறுகக் குறுகா கொடுவினையே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page