ஷேத்திரக் கோவை:
(1)
தில்லைச் சிற்றம்பலமும், செம்பொன் பள்ளி
தேவன்குடி, சிராப்பள்ளி, தெங்கூர்
கொல்லிக் குளிர் அறைப்பள்ளி, கோவல்
வீரட்டம், கோகரணம், கோடிகாவும்
முல்லைப் புறவம் முருகன்பூண்டி
முழையூர், பழையாறை, சத்திமுற்றம்
கல்லில் திகழ்சீரார் காளத்தியும்
கயிலாய நாதனையே காணலாமே
(2)
ஆரூர் மூலட்டானம், ஆனைக்காவும்
ஆக்கூரில் தான்தோன்றிமாடம், ஆவூர்
பேரூர் பிரமபுரம் பேராவூரும்
பெருந்துறை காம்பீலி, பிடவூர் பேணும்
கூரார் குறுக்கை வீரட்டானம்மும்
கோட்டூர் குடமூக்குக் கோழம்பமும்
காரார் கழுக்குன்றும் கானப்பேரும்
கயிலாய நாதனையே காணலாமே
(3)
இடைமருது ஈங்கோய் இராமேச்சரம்
இன்னம்பர் ஏரிடவை ஏமப்பேறூர்
சடைமுடி சாலைக்குடி தக்களூர்
தலையாலங்காடு தலைச்சங்காடு
கொடுமுடி குற்றாலம் கொள்ளம்பூதூர்
கோத்திட்டை கோட்டாறு கோட்டுக்காடு
கடைமுடி கானூர் கடம்பந்துறை
கயிலாய நாதனையே காணலாமே
(4)
எச்சில் இளமர், ஏமநல்லூர்
இலம்பையங்கோட்டூர், இறையான் சேரி
அச்சிறுபாக்கம் அளப்பூர் அம்பர்
ஆவடுதண்டுறை அழுந்தூர் ஆறை
கைச்சினன் கற்குடி கச்சூர், ஆலக்
கோயில், கரவீரம், காட்டுப்பள்ளி
கச்சிப் பலதளியும் ஏகம்பத்தும்
கயிலாய நாதனையே காணலாமே
(5)
கொடுங்கோளூர் அஞ்சைக்களம் செங்குன்றூர்
கொங்கணம் குன்றியூர் குரக்குக்காவும்
நெடுங்களம் நன்னிலம் நெல்லிக்காவும்
நின்றியூர் நீடூர் நியம நல்லூர்
இடும்பாவனம் எழுமூர் ஏழூர் தோழூர்
எறும்பியூர் ஏராரும் ஏமகூடம்
கடம்பை இளங்கோயில் தன்னில் உள்ளும்
கயிலாய நாதனையே காணலாமே
(6)
மண்ணிப் படிக்கரை, வாழ்கொளிபுத்தூர்
வக்கரை மந்தாரம் வாரணாசி
வெண்ணி இளத்தொட்டி வேள்விக்குடி
விளமர் விராடபுரம் வேட்களத்தும்
பெண்ணை அருள்துறை, தண் பெண்ணாகடம்
பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூரும்
கண்ணை களர் காறை கழிப்பாலையும்
கயிலாய நாதனையே காணலாமே
(7)
வீழிமிழலை வெண்காடு வேங்கூர்
வேதிகுடி விசயமங்கை வியலூர்
ஆழி அகத்தியான்பள்ளி, !அண்ணா
மலை, ஆலங்காடும் !அரதைப்பெரும்
பாழி, பழனம் பனந்தாள் பாதாளம்
பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட்டூர், தண்
காழி, கடல்நாகைக் காரோணத்தும்
கயிலாய நாதனையே காணலாமே
(8)
உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்
உருத்திரகோடி மறைக்காட்டுள்ளும்
மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்
வீரட்டம் மாதானம் கேதாரத்தும்
வெஞ்சமாக்கூடல் மீயச்சூர் வைகா
வேதீச்சுரம் விவீச்சுரம் வெற்றியூரும்
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையும்
கயிலாய நாதனையே காணலாமே
(9)
திண்டீச்சரம் சேய்ஞலூர் செம்பொன்பள்ளி
தேவூர் சிரபுரம் சிற்றேமம் சேறை
கொண்டீச்சரம் கூந்தலூர் கூழையூர் கூடல்
குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு
அண்டர் தொழும் அதிகை வீரட்டானம்
ஐயாறு அசோகந்தி ஆமாத்தூரும்
கண்டியூர் வீரட்டம் கருகாவூரும்
கயிலாய நாதனையே காணலாமே
(10)
நறையூரில் சித்தீச்சரம், நள்ளாறு
நாரையூர் நாகேச்சரம் நல்லூர், நல்ல
துறையூர், சோற்றுத்துறை சூலமங்கை
தோணிபுரம் துருத்தி சோமேச்சரம்
உறையூர் கடலொற்றியூர் ஊற்றத்தூர்
ஓமாம்புலியூர், ஓர் ஏடகத்தும்
கறையூர் கருப்பறியல் கன்றாப்பூரும்
கயிலாய நாதனையே காணலாமே
(11)
புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர்
புறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர்
வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல்
வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி
நிலமலி நெய்த்தானத்தோடு எத்தானத்தும்
நிலவு பெருங்கோயில் பல கண்டால் தொண்டீர்
கலிவலி மிக்கோனைக் கால் விரலால் செற்ற
கயிலாய நாதனையே காணலாமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...