திருப்புகலூர் – அப்பர் தேவாரம் (10)- (பொது):

<– திருப்புகலூர்

குறைந்த நேரிசை:

(1)
தம்மானம் காப்பதாகித், தையலார் வலையுள் ஆழ்ந்து
அம்மானை அமுதன் தன்னை, ஆதியை அந்தமாய
செம்மான வொளிகொள் மேனிச், சிந்தையுள் ஒன்றி நின்ற
எம்மானை நினைய மாட்டேன் என்செய்வான் தோன்றினேனே
(2)
மக்களே மணந்த தாரம், அவ்வயிற்றவரை ஓம்பும்
சிக்குளே அழுந்தி ஈசன் திறம்படேன் அவமதோரேன்
கொப்புளே போலத் தோன்றி அதனுளே மறையக் கண்டும்
இக்களேபரத்தை ஓம்ப என்செய்வான் தோன்றினேனே
(3)
கூழையேனாக மாட்டேன் கொடுவினைக் குழியில் வீழ்ந்து
ஏழினின் இசையினாலும் இறைவனை ஏத்த மாட்டேன்
மாழையொண் கண்ணி நல்ல மடந்தைமார் தமக்கும் பொல்லேன்
ஏழையேனாகி நாளும் என்செய்வான் தோன்றினேனே
(4)
முன்னையென் வினையினாலே மூர்த்தியை நினைய மாட்டேன்
பின்னைநான் பித்தனாகிப் பிதற்றுவன் பேதையேனான்
என்னுளே மன்னி நின்ற சீர்மையதாயினானை
என்னுளே நினைய மாட்டேன்  என்செய்வான் தோன்றினேனே
(5)
கறையணி கண்டன் தன்னைக் காமரம் கற்றுமில்லேன்
பிறைநுதல் பேதை மாதர் பெய்வளையார்க்கும் அல்லேன்
மறைநவில் நாவினானை மன்னி நின்றிறைஞ்சி நாளும்
இறையேயும் ஏத்த மாட்டேன்  என்செய்வான் தோன்றினேனே
(6)
வளைத்து நின்றைவர் கள்வர் வந்தெனை நடுக்கம் செய்யத்
தளைத்து வைத்துலையை ஏற்றித் தழலெரி மடுத்த நீரில்
திளைத்து நின்றாடுகின்ற ஆமைபோல் தெளிவிலாதேன்
இளைத்து நின்றாடுகின்றேன்  என்செய்வான் தோன்றினேனே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page