திருப்புகலூர் – அப்பர் தேவாரம் (19) – (பொது):

<– திருப்புகலூர்

பசுபதித் திருவிருத்தம்:

(1)
சாம்பலைப் பூசித் தரையில் புரண்டுநின் தாள்பரவி
ஏம்பலிப்பார்கட்கு இரங்குகண்டாய், இருங் கங்கையென்னும்
காம்பலைக்கும் பணைத்தோளி கதிர்ப்பூண் வனமுலைமேல்
பாம்பலைக்கும் சடையாய் எம்மை ஆளும்  பசுபதியே
(2)
உடம்பைத் தொலைவித்துன் பாதம் தலைவைத்த உத்தமர்கள்
இடும்பைப் படாமல் இரங்கு கண்டாய், இருள்ஓடச் செந்தீ
அடும் பொத்தனைய அழல்மழுவா, அழலேஉமிழும்
படம் பொத்தரவு அரையாய் எம்மை ஆளும் பசுபதியே
(3)
தாரித்திரம் தவிரா அடியார் தடுமாற்றமென்னும்
மூரித்திரைப் பௌவ நீக்கு கண்டாய், முன்னை நாளொருகால்
வேரித்தண் பூஞ்சுடர் ஐங்கணைவேள் வெந்துவீழச் செந்தீப்
பாரித்த கண்ணுடையாய் எம்மை ஆளும் பசுபதியே
(4)
ஒருவரைத் தஞ்சமென்றெண்ணாதுன் பாதம் இறைஞ்சுகின்றார்
அருவினைச் சுற்றம் அகல்வி கண்டாய், அண்டமே அணவும்
பெருவரைக் குன்றம் பிளிறப் பிளந்து வேய்த்தோளி அஞ்சப்
பருவரைத் தோலுரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே
(5)
இடுக்கொன்றும் இன்றி எஞ்சாமை உன்பாதம் இறைஞ்சுகின்றார்க்கு
கடர்க்கின்ற நோயை விலக்கு கண்டாய், அண்டம் எண்திசையும்
சுடர்த்திங்கள் சூடிச் சுழல் கங்கையோடுமண் சுரும்பு துன்றிப்
படர்க்கொண்ட செஞ்சடையாய் எம்மை ஆளும் பசுபதியே
(6)
அடலைக் கடல்கழிவான் நின்அடியிணையே அடைந்தார்
நடலைப் படாமை விலக்கு கண்டாய், நறுங்கொன்றை திங்கள்
சுடலைப் பொடிச் சுண்ண மாசுணம் சூளாமணி கிடந்து
படரச் சுடர் மகுடா எம்மை ஆளும் பசுபதியே
(7)
துறவித் தொழிலே புரிந்துன் சுரும்படியே தொழுவார்
மறவித் தொழிலது மாற்று கண்டாய், மதில் மூன்றுடைய
அறவைத் தொழில் புரிந்து அந்தரத்தே செல்லும்  மந்திரத்தேர்ப்
பறவைப் புரமெரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே
(8)
(9)
(10)
சித்தத்துருகிச் சிவன் எம்பிரான்என்று சிந்தையுள்ளே
பித்துப் பெருகப் பிதற்றுகின்றார் பிணி தீர்த்தருளாய்
மத்தத்தரக்கன் இருபது தோளும் முடியுமெல்லாம்
பத்துற்றுற நெரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page