பருவரை மங்கைதன் பங்கரைப், பாண்டியற்காரமுதாம்
ஒருவரை, ஒன்றுமிலாதவரைக், கழற் போதிறைஞ்சித்
தெரிவர நின்றுருக்கிப் – பரிமேற் கொண்ட சேவகனார்
ஒருவரையன்றி உருவறியாதென்றன் உள்ளமதே
(2)
சதுரை மறந்(து)அறிமால்கொள்வர் சார்ந்தவர்
சாற்றிச்சொன்னோம்
கதிரை மறைத்தன்ன சோதி – கழுக்கடை
கைப்பிடித்துக்
குதிரையின் மேல்வந்து கூடிடுமேற் !குடி
கேடு கண்டீர்!
மதுரையர் மன்னன் மறுபிறப்போட மறித்திடுமே
(3)
நீர்இன்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற
நெஞ்சங் கொண்டீர்
பாரின்ப வெள்ளங்கொளப் பரிமேற் கொண்ட
பாண்டியனார்
ஓரின்ப வெள்ளத்துருக் கொண்டு – தொண்டரை
உள்ளங்கொண்டார்
பேரின்ப வெள்ளத்துட் பெய்கழலே சென்று
பேணுமினே
(4)
செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன்மின்
தென்னன் !நன்னாட்
டிறைவன் கிளர்கின்ற காலம் இக்காலம், எக்
காலத்துள்ளும்
அறிவொண் கதிர்வாள் உறை கழித்தானந்த
மாக்கடவி
எறியும் பிறப்பை எதிர்ந்தார் புரள
இருநிலத்தே
(5)
காலம் உண்டாகவே காதல் செய்துய்ம்மின்,
கருதரிய
ஞாலம்உண்டானொடு நான்முகன் வானவர்
நண்ணரிய
ஆலமுண்டான் – எங்கள் பாண்டிப் பிரான்தன்
அடியவர்க்கு
மூலபண்டாரம் வழங்குகின்றான், வந்து
முந்துமினே
(6)
ஈண்டிய மாயாஇருள் கெட – !எப்பொரு
ளும்விளங்கத்
தூண்டிய சோதியை மீனவனுஞ் சொல்ல
வல்லன்அல்லன்
வேண்டிய போதே விலக்கிலை – வாய்தல்
விரும்புமின் தாள்
பாண்டியனார் அருள் செய்கின்ற முத்திப்
பரிசிதுவே
(7)
மாய வனப்பரி மேல்கொண்டு – மற்றவர்
கைக்கொளலும்
போயறும் இப்பிறப்பென்னும் பகைகள்,
!புகுந்தவருக்
காய அரும்பெருஞ் சீருடைத் !தன்னரு
ளே அருளுஞ்
சேய நெடுங்கொடைத் தென்னவன் சேவடி
சேர்மின்களே
(8)
அழிவின்றி நின்றதொர் ஆனந்த !வெள்ளத்
திடை அழுத்திக்
கழிவில் கருணையைக் காட்டிக், கடிய
வினையகற்றிப்
பழமலம் பற்றறுத்தாண்டவன் பாண்டிப்
பெரும் பதமே
முழுதுலகுந் தருவான், கொடையே சென்று
முந்துமினே
(9)
விரவிய தீவினை மேலைப் பிறப்பு முந்
நீர்கடக்கப்
பரவிய அன்பரை என்புருக்கும் பரம்
பாண்டியனார்
புரவியின் மேல்வரப் புந்தி கொளப்பட்ட
பூங்கொடியார்
மரவியன் மேல்கொண்டு தம்மையுந் தாம்!அறி
யார் மறந்தே
(10)
கூற்றை வென்றாங்கைவர் கோக்களையும் !வென்
றிருந்தழகால்
வீற்றிருந்தான் பெருந்தேவியுந் தானும், ஓர்
மீனவன்பால்
ஏற்று வந்தாருயிர்உண்ட திறல் ஒற்றைச்
சேவகனே
தேற்றமிலாதவர் சேவடி சிக்கெனச்
சேர்மின்களே
