திருப்பாண்டிக்கொடுமுடி – அப்பர் தேவாரம்:

<– திருப்பாண்டிக்கொடுமுடி

(1)
சிட்டனைச் சிவனைச் செழுஞ்சோதியை
அட்ட மூர்த்தியை, ஆல நிழலமர்
பட்டனைத், திருப்பாண்டிக் கொடுமுடி
நட்டனைத் தொழ நம்வினை நாசமே
(2)
பிரமன் மாலறியாத பெருமையன்
தருமமாகிய தத்துவன் எம்பிரான்
பரமனார்உறை பாண்டிக் கொடுமுடி
கருமமாகத் தொழு மட நெஞ்சமே
(3)
ஊசலாள் அல்லள் ஒண்கழலாள் அல்லள்
தேசமாம் திருப்பாண்டிக் கொடுமுடி
ஈசனே எனும் இத்தனை அல்லது
பேசுமாறறியாள் ஒரு பேதையே
(4)
தூண்டிய சுடர் போலொக்கும் சோதியான்
காண்டலும் எளியன் அடியார்கட்குப்
பாண்டிக் கொடுமுடி மேய பரமனைக்
காண்டும் என்பவர்க்கேதும் கருத்தொணான்
(5)
நெருக்கி அம்முடி நின்றிசை வானவர்
இருக்கொடும் பணிந்தேத்த இருந்தவன்
திருக்கொடுமுடி என்றலும் தீவினைக்
கருக்கெடும் இது கைகண்ட யோகமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page