திருநனிபள்ளி – அப்பர் தேவாரம்:

<– திருநனிபள்ளி

(1)
முற்றுணை ஆயினானை, மூவர்க்கும் முதல்வன் தன்னைச்
சொற்றுணை ஆயினானைச், சோதியை ஆதரித்து
உற்றுணர்ந்துருகி ஊறி, உள் கசிவுடையவர்க்கு
நற்றுணையாவர் போலும் நனிபள்ளி அடிகளாரே
(2)
புலர்ந்தகால் பூவு நீரும், கொண்டடி போற்ற மாட்டா
வலஞ்செய்து வாயின் நூலால் வட்டணைப் பந்தர் செய்த
சிலந்தியை அரையனாக்கிச் சீர்மைகள் அருள வல்லார்
நலந்திகழ் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே
(3)
எண்பதும் பத்தும் ஆறும் என்னுளே இருந்து மன்னிக்
கண் பழக்கொன்றும்இன்றிக் கலக்க நான் அலக்கழிந்தேன்
செண்பகம் திகழும் புன்னை செழுந்திரள் குரவம் வேங்கை
நண்புசெய் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே
(4)
பண்ணினார் பாடலாகிப் பழத்தினில் இரதமாகிக்
கண்ணினார் பார்வையாகிக் கருத்தொடு கற்பமாகி
எண்ணினார் எண்ணமாகி ஏழுலகனைத்துமாகி
நண்ணினார் வினைகள் தீர்ப்பார் நனிபள்ளி அடிகளாரே
(5)
துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்திராதே
அஞ்செழுத்தோதி நாளும் அரனடிக்கன்பதாகும்
வஞ்சனைப் பால்சோறாக்கி வழக்கிலா அமணர் தந்த
நஞ்சமுதாக்குவித்தார் நனிபள்ளி அடிகளாரே
(6)
செம்மலர்க் கமலத்தோனும் திருமுடி காண மாட்டான்
அம்மலர்ப் பாதம் காண்பான் ஆழியான் அகழ்ந்தும் காணான்
நின்மலன் என்றங்கேத்து நினைப்பினை அருளி நாளும்
நம்மலம் அறுப்பர் போலும் நனிபள்ளி அடிகளாரே
(7)
அரவத்தால் வரையைச் சுற்றி அமரரோடசுரர் கூடி
அரவித்துக் கடையத் தோன்று ஆலநஞ்சமுதா உண்டார்
விரவித் தம்அடியராகி வீடிலாத் தொண்டர் தம்மை
நரகத்தில் வீழ ஒட்டார் நனிபள்ளி அடிகளாரே
(8)
மண்ணுளே திரியும் போது வருவன பலவும் குற்றம்
புண்ணுளே புரைபுரையன் புழுப்பொதி பொள்ளல்ஆக்கை
***
(9)
பத்துமோர் இரட்டி தோளான் பாரித்து மலையெடுக்கப்
பத்துமோர் இரட்டி தோள்கள் படர் உடம்படர ஊன்றிப்
பத்துவாய் கீதம் பாடப் பரிந்தவற்கருள் கொடுத்தார்
பத்தர்தாம் பரவியேத்து நனிபள்ளிப் பரமனாரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page