(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(சம்பந்தர் தேவாரம்):
(1)
பூவலர்ந்தன கொண்டு முப்போதும்உம் பொற்கழல்
தேவர் வந்து வணங்கு மிகு தெளிச்சேரியீர்
மேவரும் தொழிலாளொடு கேழல்பின் வேடனாம்
பாவகம் கொடு நின்றதுபோலும் நும் பான்மையே
(2)
விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவர் ஏத்தவே
திளைக்கும் தீர்த்தமறாத திகழ் தெளிச்சேரியீர்
வளைக்கும் திண்சிலைமேல் ஐந்துபாணமும் தானெய்து
களிக்கும் காமனை எங்ஙனம்நீர் கண்ணில் காய்ந்ததே
(3)
வம்படுத்த மலர்ப்பொழில் சூழ, மதிதவழ்
செம்படுத்த செழும் புரிசைத் தெளிச்சேரியீர்
கொம்படுத்ததொர் கோல விடைமிசைக் கூர்மையோடு
அம்படுத்த கண்ணாளொடு மேவல் அழகிதே
(4)
காருலாம் கடல்இப்பிகள் முத்தம் கரைப்பெயும்
தேருலா நெடுவீதியதார் தெளிச்சேரியீர்
ஏருலாம் பலிக்கே இட வைப்பிடம் இன்றியே
வாருலா முலையாளைஒர் பாகத்து வைத்ததே
(5)
பக்க நுந்தமைப் பார்ப்பதி ஏத்திமுன் பாவிக்கும்
செக்கர் மாமதிசேர் மதில்சூழ் தெளிச்சேரியீர்
மைக்கொள் கண்ணியர் கைவளை மால்செய்து வௌவவே
நக்கராய் உ லகெங்கும் பலிக்கு நடப்பதே
(6)
தவள வெண்பிறை தோய்தரு தாழ்பொழில் சூழநல்
திவள மாமணி மாடம் திகழ் தெளிச்சேரியீர்
குவளை போல் கண்ணி துண்ணென வந்து குறுகிய
கவள மால்கரி எங்ஙனம் நீர்கையில் காய்ந்ததே
(7)
கோடடுத்த பொழிலின் மிசைக்குயில் கூவிடும்
சேடடுத்த தொழிலின் மிகு தெளிச்சேரியீர்
மாடடுத்த மலர்க் கண்ணினாள் கங்கை நங்கையைத்
தோடடுத்த மலர்ச்சடை என்கொல்நீர் சூடிற்றே
(8)
கொத்திரைத்த மலர்க் குழலாள் குயில் கோலஞ்சேர்
சித்திரக்கொடி மாளிகைசூழ் தெளிச்சேரியீர்
வித்தகப்படை வல்ல அரக்கன் விறல்தலை
பத்திரட்டிக் கர நெரித்திட்டதும் பாதமே
(9)
காலெடுத்த திரைக்கை கரைக்கெறி கானல்சூழ்
சேலடுத்த வயல் பழனத் தெளிச்சேரியீர்
மால் அடித்தல மாமலரான் முடி தேடியே
ஓலமிட்டிட எங்ஙனமோர் உருக் கொண்டதே
(10)
மந்திரம்தரு மாமறையோர்கள் தவத்தவர்
செந்திலங்கு மொழியவர் சேர் தெளிச்சேரியீர்
வெந்தலாகிய சாக்கியரோடு சமணர்கள்
தந்திறத்தன நீக்குவித்தீர் ஓர் சதிரரே
(11)
திக்குலாம் பொழில்சூழ் தெளிச்சேரியெம் செல்வனை
மிக்க காழியுண் ஞானசம்பந்தன் விளம்பிய
தக்க பாடல்கள் பத்தும் வல்லார்கள் தடமுடித்
தொக்க வானவர் சூழ இருப்பவர் சொல்லிலே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...