திருத்தூங்கானைமாடம் – அப்பர் தேவாரம்:

<– திருத்தூங்கானைமாடம்

(1)
பொன்னார் திருவடிக்கொன்றுண்டு விண்ணப்பம், போற்றிசெய்யும்
என்ஆவி காப்பதற்கிச்சை உண்டேல், இருங்கூற்றகல
மின்னாரு மூவிலைச் சூலம் என்மேல் பொறிமேவு கொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானைமாடச்  சுடர்க்கொழுந்தே.
(2)
ஆவா சிறுதொண்டன் என் நினைந்தானென்று, அரும் பிணிநோய்
காவாதொழியில் கலக்கும் உன்மேல் பழி,  காதல் செய்வார்
தேவா திருவடி நீறென்னைப் பூசு, செந்தாமரையின்
பூவார் கடந்தையுள் தூங்கானை மாடத்தெம் புண்ணியனே
(3)
கடவும் திகிரி கடவாதொழியக் கயிலையுற்றான்
படவும் திருவிரல் ஒன்று வைத்தாய் பனிமால் வரைபோல்
இடவம் பொறித்தென்னை ஏன்றுகொள்ளாய் இருஞ்சோலை திங்கள்
தடவும் கடந்தையுள் தூங்கானை மாடத்தெம் தத்துவனே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page