(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(சம்பந்தர் தேவாரம்):
(1)
நலச்சங்க வெண்குழையும் தோடும் பெய்தோர், நால்வேதம்
சொலச் சங்கை இல்லாதீர், சுடுகாடு அல்லால் கருதாதீர்
குலைச்செங்காய்ப் பைங்கமுகின் குளிர்கொள் சோலைக் குயிலாலும்
தலைச்சங்கைக் கோயிலே கோயிலாகத் தாழ்ந்தீரே
(2)
துணிமல்கு கோவணமும் தோலும்காட்டித் தொண்டாண்டீர்
மணிமல்கு கண்டத்தீர், அண்டர்க்கெல்லாம் மாண்பானீர்
பிணிமல்கு நூல்மார்பர், பெரியோர் வாழும் தலைச்சங்கை
அணிமல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே
(3)
சீர்கொண்ட பாடலீர், செங்கண் வெள்ளேறூர்தியீர்
நீர்கொண்டும் பூக்கொண்டு நீங்காத் தொண்டர் நின்றேத்தத்
தார்கொண்ட நூல்மார்பர், தக்கோர்வாழும் தலைச்சங்கை
ஏர்கொண்ட கோயிலே கோயிலாக இருந்தீரே
(4)
வேடஞ்சூழ் கொள்கையீர், வேண்டிநீண்ட வெண்திங்கள்
ஓடஞ்சூழ் கங்கையும் உச்சிவைத்தீர், தலைச்சங்கைக்
கூடஞ்சூழ் மண்டபமும் குலாய வாசல்கொடித் தோன்றும்
மாடஞ்சூழ் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
(5)
சூலஞ்சேர் கையினீர், சுண்ண வெண்ணீறாடலீர்
நீலஞ்சேர் கண்டத்தீர், நீண்ட சடைமேல் நீரேற்றீர்
ஆலஞ்சேர் தண்கானல் அன்னமன்னும் தலைச்சங்கைக்
கோலஞ்சேர் கோயிலே கோயிலாகக் கொண்டீரே
(6)
நிலநீரொடு ஆகாசம் அனல் காலாகி நின்றைந்து
புலநீர்மை புறங்கண்டார், பொக்கம் செய்யார், போற்றோவார்
சலநீதர் அல்லாதார், தக்கோர் வாழும் தலைச்சங்கை
நலநீர கோயிலே கோயிலாக நயந்தீரே
(7)
அடிபுல்கு பைங்கழல்கள் ஆர்ப்பப் பேர்ந்தோர் அனலேந்திக்
கொடிபுல்கு மென்சாயல் உமையோர் பாகம் கூடினீர்
பொடிபுல்கு நூல்மார்பர் புரிநூலாளர் தலைச்சங்கைக்
கடிபுல்கு கோயிலே கோயிலாகக் கலந்தீரே
(8)
திரையார்ந்த மாகடல்சூழ் தென்னிலங்கைக் கோமானை
வரையார்ந்த தோளடர விரலால்ஊன்று மாண்பினீர்
அரையார்ந்த மேகலையீர் அந்தணாளர் தலைச்சங்கை
நிரையார்ந்த கோயிலே கோயிலாக நினைந்தீரே
(9)
பாயோங்கு பாம்பணை மேலானும், பைந்தாமரையானும்
போயோங்கிக் காண்கிலார், புறநின்று ஓரார், போற்றோவார்
தீயோங்கு மறையாளர் திகழும் செல்வத் தலைச்சங்கைச்
சேயோங்கு கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே
(10)
அலையாரும் புனல்துறந்த அமணர் குண்டர் சாக்கியர்
தொலையாதங்கலர் தூற்றத் தோற்றம் காட்டி ஆட்கொண்டீர்
தலையான நால்வேதம் தரித்தார் வாழும் தலைச்சங்கை
நிலையார்ந்த கோயிலே கோயிலாக நின்றீரே
(11)
நளிரும் புனற்காழி நல்ல ஞானசம்பந்தன்
குளிரும் தலைச்சங்கை ஓங்குகோயில் மேயானை
ஒளிரும் பிறையானை உரைத்தபாடல் இவை வல்லார்
மிளிரும் திரைசூழ்ந்த வையத்தார்க்கு மேலாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...