(குறிப்பு: சுந்தரரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(சுந்தரர் தேவாரம்):
(1)
ஊனாய் உயிர் புகலாய், அகலிடமாய், முகில் பொழியும்
வானாய், வருமதியாய் விதிவருவான் இடம், பொழிலின்
தேனாதரித்திசை வண்டினம் மிழற்றுந் திருச்சுழியல்
நானாவிதம் நினைவார்தமை நலியார் நமன்தமரே
(2)
தண்டேர் மழுப்படையான், மழவிடையான், எழு கடல்நஞ்சு
உண்டே, புரம்எரியச் சிலை வளைத்தான் இமையவர்க்காத்
திண்தேர் மிசை நின்றான், அவன் உறையும் திருச்சுழியல்
தொண்டேசெய வல்லாரவர் நல்லார், துயர்இலரே
(3)
கவ்வைக்கடல் கதறிக்கொணர் முத்தங் கரைக்கேற்றக்
கொவ்வைத் துவர்வாயார் குடைந்தாடுந் திருச்சுழியல்
தெய்வத்தினை வழிபாடு செய்தெழுவார் அடிதொழுவார்
அவ்வத்திசைக்கு அரசாகுவர், அலராள் பிரியாளே
(4)
மலையான் மகள் மடமாதிடம்ஆகத்தவன், மற்றுக்
கொலை யானையின் உரிபோர்த்த எம்பெருமான் திருச்சுழியல்
அலையார் சடையுடையான் அடிதொழுவார் பழுதுள்ளம்
நிலையார் திகழ்புகழால் நெடு வானத்துயர்வாரே
(5)
உற்றான் நமக்கு, உயரும் மதிச்சடையான், புலனைந்தும்
செற்றார் திருமேனிப் பெருமான்ஊர் திருச்சுழியல்
பெற்றான் இனிதுறையத் திறம்பாமைத் திருநாமம்
கற்றாரவர் கதியுள்செல்வர் ஏத்தும்அது கடனே
(6)
மலந்தாங்கிய பாசப் பிறப்பறுப்பீர், துறைக்கங்கைச்
சலந்தாங்கிய முடியான் அமர்ந்திடமாம் திருச்சுழியல்
நிலந்தாங்கிய மலரால் கொழும் புகையால் நினைந்தேத்தும்
தலந்தாங்கிய புகழால்மிகு தவமாம் சதுராமே
(7)
சைவத்த செவ்வுருவன், திருநீற்றன், உரும்ஏற்றன்
கை வைத்தொரு சிலையால் அரண்மூன்றும் எரி செய்தான்
தெய்வத்தவர் தொழுதேத்திய குழகன் திருச்சுழியல்
மெய்வைத்தடி நினைவார் வினைதீர்தல் எளிதன்றே
(8)
பூவேந்திய பீடத்தவன் தானும், மடல் அரியும்
கோவேந்திய வினயத்தொடு குறுகப் புகலறியார்
சேவேந்திய கொடியானவன் உறையுந் திருச்சுழியல்
மாவேந்திய கரத்தான் எமசிரத்தான் தனதடியே
(9)
கொண்டாடுதல் புரியா வரு தக்கன் பெருவேள்வி
செண்டாடுதல் புரிந்தான் திருச்சுழியல் பெருமானைக்
குண்டாடிய சமணாதர்கள் குடைச்சாக்கியர் அறியா
மிண்டாடிய அது செய்தது வானால் வருவிதியே
(10)
நீருர்தரு நிமலன்திரு மலையார்க்கயலருகே
தேரூர்தரும் அரக்கன்சிரம் நெரித்தான் திருச்சுழியல்
பேரூரென உறைவான் அடிப்பெயர் நாவலர் கோமான்
ஆரூரன் தமிழ்மாலை பத்தறிவார் துயரிலரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...
