(1)
நெடியமால் பிரமனோடு நீரெனும் பிலயம் கொள்ள
அடியொடு முடியும் காணார், அருச்சுனற்கம்பும் வில்லும்
துடியுடை வேடராகித் தூய மந்திரங்கள் சொல்லிக்
கொடிநெடும் தேர்கொடுத்தார் குறுக்கை வீரட்டனாரே
(2)
ஆத்தமாய் அயனும் மாலும் அன்றி மற்றொழிந்த தேவர்
சோத்தம்எம் பெருமானென்று தொழுது தோத்திரங்கள் சொல்லத்
தீர்த்தமா அட்டமீ முன் சீருடை ஏழுநாளும்
கூத்தராய் வீதி போந்தார் குறுக்கை வீரட்டனாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...