திருக்காளத்தி – சம்பந்தர் தேவாரம் (2):

<– திருக்காளத்தி

(1)
சந்தமார் அகிலொடு சாதி தேக்கம் மரம்
உந்துமா முகலியின் கரையினில் உமையொடும்
மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி
எந்தையார் இணையடி என் மனத்துள்ளவே
(2)
ஆலமா மரவமோடு அமைந்த சீர்ச் சந்தனம்
சாலமா பீலியும் சண்பகம் உந்தியே
காலமார் முகலி வந்தணைதரு காளத்தி
நீலமார் கண்டனை நினையுமா நினைவதே
(3)
கோங்கமே குரவமே கொன்றையம் பாதிரி
மூங்கில் வந்தணைதரு முகலியின் கரையினில்
ஆங்கமர் காளத்தி அடிகளை அடிதொழ
வீங்குவெந் துயர்கெடும் வீடெளிதாகுமே
(4)
கரும்புதேன் கட்டியும் கதலியின் கனிகளும்
அரும்புநீர் முகலியின் கரையினில் அணிமதி
ஒருங்குவார் சடையினன் காளத்தி ஒருவனை
விரும்புவார் அவர்கள்தாம் விண்ணுலகாள்வரே
(5)
வரைதரும் அகிலொடு மாமுத்தம் உந்தியே
திரைதரு முகலியின் கரையினில் தேமலர்
விரைதரு சடைமுடிக் காளத்தி விண்ணவன்
நிரைதரு கழலிணை நித்தலும் நினைமினே
(6)
(7)
(8)
முத்துமா மணிகளும் முழுமலர்த் திரள்களும்
எத்துமா முகலியின் கரையினில் எழில்பெறக்
கத்திட அரக்கனைக் கால்விரல் ஊன்றிய
அத்தன்தன் காளத்தி அணைவது கருமமே
(9)
மண்ணுமா வேங்கையும் மருதுகள் பீழ்ந்துந்தி
நண்ணுமா முகலியின் கரையினில் நன்மைசேர்
வண்ணமா மலரவன் மாலவன் காண்கிலா
அண்ணலார் காளத்தி ஆங்கணைந்துய்ம்மினே
(10)
வீங்கிய உடலினர் விரிதரு துவர்உடைப்
பாங்கிலார் சொலைவிடும் பரனடி பணியுமின்
ஓங்குவண் காளத்தி உள்ளமோடுணர்தர
வாங்கிடும் வினைகளை வானவர்க்கொருவனே
(11)
அட்டமா சித்திகள் அணைதரு காளத்தி
வட்டவார் சடையனை வயலணி காழியான்
சிட்ட நான்மறை வல ஞானசம்பந்தன் சொல்
இட்டமாப் பாடுவார்க்கில்லையாம் பாவமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page