திருக்கானூர் – அப்பர் தேவாரம்:

<-- திருக்கானூர்

(1)
திருவின் நாதனும், செம்மலர் மேலுறை
உருவனாய்; உலகத்தின் உயிர்க்கெலாம்
கருவனாகி முளைத்தவன்; கானூரில்
பரமனாய பரஞ்சுடர் காண்மினே
(2)
பெண்டிர் மக்கள் பெருந்துணை நன்னிதி
உண்டின்றே என்று உகவன்மின் ஏழைகாள்
கண்டு கொள்மின்நீர் கானூர் முளையினைப்
புண்டரீகப் பொதும்பில் ஒதுங்கியே
(3)
தாயத்தார் தமர் நல்நிதி என்னும்இம்
மாயத்தே கிடந்திட்டு மயங்கிடேல்
காயத்தே உளன் கானூர் முளையினை
வாயத்தால் வணங்கீர் வினை மாயவே
(4)
குறியில் நின்றுண்டு கூறையிலாச் சமண்
நெறியை விட்டு நிறைகழல் பற்றினேன்
அறியல் உற்றிரேல் கானூர் முளையவன்
செறிவு செய்திட்டு இருப்பதென் சிந்தையே
(5)
பொத்தல் மண்சுவர்ப் பொல்லாக் குரம்பையை
மெய்த்தன் என்று வியந்திடல் ஏழைகாள்
சித்தர் பத்தர்கள் சேர் திருக்கானூரில்
அத்தன் பாதம் அடைதல் கருமமே
(6)
கல்வி ஞானக் கலைப் பொருளாயவன்
செல்வம் மல்கு திருக்கானூர் ஈசனை
எல்லியும் பகலும் இசைவானவா
சொல்லிடீர் நும் துயரங்கள் தீரவே
(7)
நீரும் பாரும் நெருப்பும் அருக்கனும்
காரும் மாருதம் கானூர் முளைத்தவன்
சேர்வும் ஒன்றறியாது திசைதிசை
ஓர்வும் ஒன்றிலரோடித் திரிவரே
(8)
ஓமத்தோடு அயன் மாலறியா வணம்
வீமப் பேரொளியாய விழுப்பொருள்
காமற் காய்ந்தவன் கானூர் முளைத்தவன்
சேமத்தால் இருப்பாவது என் சிந்தையே
(9)
(10)
வன்னி கொன்றை எருக்கணிந்தான் மலை
உன்னியே சென்றெடுத்தவன் ஒண்திறல்
தன்னை வீழத் தனிவிரல் வைத்தவன்
கன்னி மாமதில் கானூர்க் கருத்தனே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page