(1)
கொன்று செய்த கொடுமையால் பல சொல்லவே
நின்ற பாவ வினைகள் தாம்பல நீங்கவே
சென்று சென்று தொழுமின் தேவர் பிரானிடம்
கன்றினோடு பிடிசூழ் தண் கழுக்குன்றமே
(2)
இறங்கிச் சென்று தொழுமின் இன்னிசை பாடியே
பிறங்கு கொன்றைச் சடையன் எங்கள் பிரான்இடம்
நிறங்கள் செய்த மணிகள் நித்திலம் கொண்டிழி
கறங்கு வெள்ளைஅருவித் தண் கழுக்குன்றமே
(3)
நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால்
ஆளும் நம்ம வினைகள் அல்கி அழிந்திடத்
தோளும் எட்டுமுடைய மாமணிச் சோதியான்
காளகண்டன் உறையும் தண் கழுக்குன்றமே
(4)
வெளிறு தீரத் தொழுமின் வெண்பொடியாடியை
முளிறிலங்கு மழுவாளன் முந்தி உறைவிடம்
பிளிறு தீரப் பெருங்கைப் பெய்மதம் மூன்றுடைக்
களிறினோடு பிடிசூழ் தண் கழுக்குன்றமே
(5)
புலைகள் தீரத் தொழுமின் புன்சடைப் புண்ணியன்
இலைகொள் சூலப்படையன் எந்தை பிரான்இடம்
முலைகள் உண்டு தழுவுக் குட்டியொடு முசுக்
கலைகள் பாயும் புறவில் தண் கழுக்குன்றமே
(6)
மடமுடைய அடியார் தம் மனத்தேயுற
விடமுடைய மிடறன் விண்ணவர் மேலவன்
படமுடைய அரவன் தான் பயிலும் இடம்
கடமுடைய புறவில் தண் கழுக்குன்றமே
(7)
ஊனமில்லா அடியார் தம் மனத்தேஉற
ஞான மூர்த்தி நட்டமாடி நவிலும் இடம்
தேனும் வண்டும் மதுவுண்டு இன்னிசை பாடவே
கான மஞ்ஞை உறையும் தண் கழுக்குன்றமே
(8)
அந்தம் இல்லா அடியார் தம் மனத்தேஉற
வந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன்
சிந்தை செய்த மலர்கள் நித்தலும் சேரவே
சந்தம் நாறும் புறவில் தண் கழுக்குன்றமே
(9)
பிழைகள் தீரத் தொழுமின் பின்சடைப் பிஞ்ஞகன்
குழைகொள் காதன் குழகன்தான் உறையும்இடம்
மழைகள் சாலக் கலித்து நீடுயர் வேயவை
கழைகொள் முத்தம் சொரியும் தண் கழுக்குன்றமே
(10)
பல்லின் வெள்ளைத் தலையன் தான் பயிலும் இடம்
கல்லின் வெள்ளை அருவித் தண் கழுக்குன்றினை
மல்லின் மல்கு திரள்தோள் ஊரன் வனப்பினால்
சொல்லல் சொல்லித் தொழுவாரைத் தொழுமின்களே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...