திருக்கழுக்குன்றம் – அப்பர் தேவாரம்:

<– திருக்கழுக்குன்றம்

(1)
மூவிலைவேல் கையானை மூர்த்தி தன்னை
    முதுபிணக்காடுடையானை, முதலானானை
ஆவினில் ஐந்துகந்தானை, அமரர் கோனை
    ஆலாலம் உண்டுகந்த ஐயன் தன்னைப்
பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்
    புணர்வரிய பெருமானைப், புனிதன் தன்னைக்
காவலனைக், கழுக்குன்றம் அமர்ந்தான் தன்னைக்
    கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே
(2)
பல்லாடு தலை சடைமேல் உடையான் தன்னைப்
    பாய்புலித்தோல் உடையானைப் பகவன் தன்னைச்
சொல்லோடு பொருளனைத்தும் ஆனான் தன்னைச்
    சுடருருவில் என்பறாக் கோலத்தானை
அல்லாத காலனைமுன் அடர்த்தான் தன்னை
    ஆலின்கீழ் இருந்தானை, அமுதானானைக்
கல்லாடை புனைந்தருளும் காபாலியைக்
    கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page