(1)
வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்
எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்திலள்
கண்ணுலாம் பொழில்சூழ் கழிப்பாலைஎம்
அண்ணலே அறிவான்இவள் தன்மையே
(2)
மருந்து வானவர் உய்ய நஞ்சுண்டுகந்து
இருந்தவன்; கழிப்பாலையுள் எம்பிரான்
திருந்து சேவடி சிந்தையுள் வைத்திவள்
பரிந்துரைக்கிலும் என்சொல் பழிக்குமே
(3)
மழலைதான் வரச் சொல் தெரிகின்றிலள்
குழலின் நேர்மொழி கூறிய கேண்மினோ
அழகனே கழிப்பாலைஎம் அண்ணலே
இகழ்வதோ எனை ஏன்றுகொள் என்னுமே
(4)
செய்ய மேனி வெண்ணீறணிவான் தனை
மையலாகி மதக்கிலர் ஆரையும்
கைகொள் வெண்மழுவன்; கழிப்பாலைஎம்
ஐயனே அறிவான் இவள் தன்மையே
(5)
கருத்தனைக், கழிப்பாலையுள் மேவிய
ஒருத்தனை, உமையாள் ஒரு பங்கனை
அருத்தியால் சென்று கண்டிட வேண்டுமென்று
ஒருத்தியார் உளம் ஊசலதாடுமே
(6)
கங்கையைச் சடை வைத்து, மலைமகள்
நங்கையை உடனே வைத்த நாதனார்
திங்கள் சூடித் திருக்கழிப்பாலையான்
இங்கு வந்திடும் என்று இறுமாக்குமே
(7)
ஐயனே; அழகே; அனலேந்திய
கையனே; கறை சேர்தரு கண்டனே
மையுலாம் பொழில்சூழ் கழிப்பாலைஎம்
ஐயனே; விதியே அருள் என்னுமே
(8)
பத்தர்கட்கு அமுதாய பரத்தினை
முத்தனை, முடிவொன்றிலா மூர்த்தியை
அத்தனை, அணியார் கழிப்பாலைஎம்
சித்தனைச் சென்று சேருமா செப்புமே
(9)
…
(10)
பொன்செய் மாமுடி வாளரக்கன் தலை
அஞ்சு நான்கும் ஒன்றும் இறுத்தானவன்
என்செயான் கழிப்பாலையுள் எம்பிரான்
துஞ்சும் போதும் துணை எனலாகுமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...