(1)
முத்திலங்கு முறுவல் உமை அஞ்சவே
மத்த யானை மறுகவ்வுரி வாங்கியக்
கத்தை போர்த்த கடவுள் கருகாவூர்எம்
அத்தர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே
(2)
விமுத வல்ல சடையான் வினை உள்குவார்க்கு
அமுத நீழல் அகலாததோர் செல்வமாம்
கமுத முல்லை கமழ்கின்ற கருகாவூர்
அமுதர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே
(3)
பழகவல்ல சிறுத்தொண்டர் பாவின் இசைக்
குழகரென்று குழையா அழையா வரும்
கழல்கொள் பாடலுடையார் கருகாவூர்எம்
அழகர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே
(4)
பொடி மெய்பூசி, மலர் கொய்து, புணர்ந்துடன்
செடியரல்லா உள்ளம் நல்கிய செல்வத்தர்
கடிகொள் முல்லை கமழும் கருகாவூர்எம்
அடிகள் வண்ணம் அழலும் அழல் வண்ணமே
(5)
மையலின்றி மலர் கொய்து வணங்கிடச்
செய்ய உள்ளம் மிக நல்கிய செல்வத்தர்
கைதல் முல்லை கமழும் கருகாவூர்எம்
ஐயர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே
(6)
மாசில் தொண்டர் மலர் கொண்டு வணங்கிட
ஆசையார அருள் நல்கிய செல்வத்தர்
காய்சினத்த விடையார் கருகாவூர்எம்
ஈசர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே
(7)
வெந்த நீறு மெய்பூசிய வேதியன்
சிந்தை நின்றருள் நல்கிய செல்வத்தன்
கந்த மௌவல் கமழும் கருகாவூர்எம்
எந்தை வண்ணம் அழலும் அழல் வண்ணமே
(8)
…
(9)
பண்ணினேர் மொழியாளை ஓர் பாகனார்
மண்ணு கோலம் உடைஅம் மலரானொடும்
கண்ணன் நேட அரியார் கருகாவூர்எம்
அண்ணல் வண்ணம் அழலும் அழல் வண்ணமே
(10)
போர்த்த மெய்யினர் போதுழல்வார்கள் சொல்
தீர்த்தமென்று தெளிவீர் தெளியேன்மின்
கார்த்தண் முல்லை கமழும் கருகாவூர் எம்
ஆத்தர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே
(11)
கலவ மஞ்ஞை உலவும் கருகாவூர்
நிலவு பாடல் உடையான்தன் நீள்கழல்
குலவு ஞானசம்பந்தன செந்தமிழ்
சொல வலார் அவர் தொல்வினை தீருமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...