(1)
கனகமா வயிரமுந்து மாமணிக் கயிலை கண்டும்
உனகனாய் அரக்கனோடி எடுத்தலும் உமையாளஞ்ச
அனகனாய் நின்ற ஈசன் ஊன்றலும் அலறி வீழ்ந்தான்
மனகனா ஊன்றினானேல் மறித்து நோக்கில்லை அன்றே
(2)
கதித்தவன் கண் சிவந்து கயிலைநன் மலையைஓடி
அதிர்த்தவன் எடுத்திடல்லும் அரிவைதான் அஞ்ச ஈசன்
நெதித்தவன் ஊன்றியிட்ட நிலை அழிந்தலறி வீழ்ந்தான்
மதித்திறை ஊன்றினானேல் மறித்து நோக்கில்லை அன்றே
(3)
கறுத்தவன் கண் சிவந்து கயிலைநன் மலையைக் கையால்
மறித்தலும் மங்கை அஞ்ச வானவர் இறைவன் நக்கு
நெறித்தொரு விரலால் ஊன்ற நெடுவரை போல வீழ்ந்தான்
மறித்திறை ஊன்றினானேல் மறித்து நோக்கில்லை அன்றே
(4)
கடுத்தவன் கண் சிவந்து கயிலைநன் மலையை ஓடி
எடுத்தலும் மங்கை அஞ்ச இறையவன் இறையே நக்கு
நொடிப்பள விரலால் ஊன்ற நோவதும் அலறியிட்டான்
மடித்திறை ஊன்றினானேல் மறித்து நோக்கில்லை அன்றே
(5)
கன்றித்தன் கண்சிவந்து கயிலைநன் மலையை ஓடி
வென்றித்தன் கைத்தலத்தால் எடுத்தலும் வெருவ மங்கை
நன்றுத்தான் நக்கு நாதன் ஊன்றலும் நகழ வீழ்ந்தான்
மன்றித்தான் ஊன்றினானேல் மறித்து நோக்கில்லை அன்றே
(6)
களித்தவன் கண் சிவந்து கயிலைநன் மலையை ஓடி
நெளித்தவன் எடுத்திடல்லும் நேரிழை அஞ்ச நோக்கி
வெளித்தவன் ஊன்றியிட்ட வெற்பினால் அலறி வீழ்ந்தான்
மளித்திறை ஊன்றினானேல் மறித்து நோக்கில்லை அன்றே
(7)
கருத்தனாய்க் கண் சிவந்து கயிலைநன் மலையைக் கையால்
எருத்தனாய் எடுத்தவாறே ஏந்திழை அஞ்ச ஈசன்
திருத்தனாய் நின்ற தேவன் திருவிரல் ஊன்ற வீழ்ந்தான்
வருத்துவான் ஊன்றினானேல் மறித்து நோக்கில்லை அன்றே
(8)
கடியவன் கண் சிவந்து கயிலைநன் மலையை ஓடி
வடிவுடை மங்கை அஞ்ச எடுத்தலும் மருவ நோக்கிச்
செடிபடத் திருவிரல்லால் ஊன்றலும் சிதைந்து வீழ்ந்தான்
வடிவுற ஊன்றினானேல் மறித்து நோக்கில்லை அன்றே
(9)
கரியத்தான் கண் சிவந்து கயிலைநன் மலையைப் பற்றி
இரியத்தான் எடுத்திடல்லும் ஏந்திழை அஞ்ச ஈசன்
நெரியத்தான் ஊன்றா முன்னம் நிற்கிலாதலறி வீழ்ந்தான்
மரியத்தான் ஊன்றினானேல் மறித்து நோக்கில்லை அன்றே
(10)
கற்றனன் கயிலை தன்னைக் காண்டலும் அரக்கன் ஓடிச்
செற்றவன் எடுத்தவாறே சேயிழை அஞ்ச ஈசன்
உற்றிறை ஊன்றா முன்னம் உணர்வழி வகையால் வீழ்ந்தான்
மற்றிறை ஊன்றினானேல் மறித்து நோக்கில்லை அன்றே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...