திருக்கச்சி ஏகம்பம் – சம்பந்தர் தேவாரம் (3):

<-- திருக்கச்சி ஏகம்பம்

(1)
கருவார் கச்சித் திருஏகம்பத்து
ஒருவா என்ன மருவா வினையே
(2)
மதியார் கச்சி நதி ஏகம்பம்
விதியால் ஏத்தப் பதிஆவாரே
(3)
கலியார் கச்சி மலிஏகம்பம்
பலியால் போற்ற நலியா வினையே
(4)
வரமார் கச்சிப் புரம் ஏகம்பம்
பரவா ஏத்த விரவா வினையே
(5)
படமார் கச்சி இடம் ஏகம்பத்து
உடையாய் என்ன அடையா வினையே
(6)
நலமார் கச்சி நிலவு ஏகம்பம்
குலவா ஏத்தக் கலவா வினையே
(7)
கரியின் உரியன் திருஏகம்பன்
பெரிய புரமூன்று எரி செய்தானே
(8)
இலங்கை அரசைத் துலங்க ஊன்றும்
நலம்கொள் கம்பன் இலங்கு சரணே
(9)
மறையோன் அரியும் அறியா அனலன்
நெறி ஏகம்பம் குறியால் தொழுமே
(10)
பறியாத் தேரர் நெறியில் கச்சிச்
செறிகொள் கம்பம் குறுகுவோமே
(11)
கொச்சை வேந்தன் கச்சிக் கம்பம்
மெச்சும் சொல்லை நச்சும் புகழே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page