(1)
விரும்பி ஊறு, விடேல் மட நெஞ்சமே
கரும்பின் ஊறல் கண்டாய் கலந்தார்க்கவன்
இரும்பின் ஊறல் அறாததோர் வெண்தலை
எறும்பியூர் மலையான் எங்கள் ஈசனே
விரும்பி ஊறு, விடேல் மட நெஞ்சமே
கரும்பின் ஊறல் கண்டாய் கலந்தார்க்கவன்
இரும்பின் ஊறல் அறாததோர் வெண்தலை
எறும்பியூர் மலையான் எங்கள் ஈசனே
(2)
பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுசீர்க்
கறங்கு பூத கணமுடைக் கண்ணுதல்
நறுங்குழல் மடவாளொடு நாள்தொறும்
எறும்பியூர் மலையான் எங்கள் ஈசனே
பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுசீர்க்
கறங்கு பூத கணமுடைக் கண்ணுதல்
நறுங்குழல் மடவாளொடு நாள்தொறும்
எறும்பியூர் மலையான் எங்கள் ஈசனே
(3)
மருந்து வானவர் தானவர்க்கின்சுவை
புரிந்த புன்சடைப் புண்ணியன், கண்ணுதல்
பொருந்து, பூண்முலை மங்கை நல்லாளொடும்
எறும்பியூர் மலையான் எங்கள் ஈசனே
மருந்து வானவர் தானவர்க்கின்சுவை
புரிந்த புன்சடைப் புண்ணியன், கண்ணுதல்
பொருந்து, பூண்முலை மங்கை நல்லாளொடும்
எறும்பியூர் மலையான் எங்கள் ஈசனே
(4)
நிறங்கொள் கண்டத்து நின்மலன், எம்இறை
மறங்கொள் வேல்கண்ணி வாள்நுதல் பாகமாய்
அறம் புரிந்தருள் செய்தஎம் அங்கணன்
எறும்பியூர் மலையான் எங்கள் ஈசனே
நிறங்கொள் கண்டத்து நின்மலன், எம்இறை
மறங்கொள் வேல்கண்ணி வாள்நுதல் பாகமாய்
அறம் புரிந்தருள் செய்தஎம் அங்கணன்
எறும்பியூர் மலையான் எங்கள் ஈசனே
(5)
நறும்பொன் நாண்மலர்க் கொன்றையும் நாகமும்
துறும்பு செஞ்சடைத் தூமதி வைத்து, வான்
உறும்பொன் மால்வரைப் பேதையோடு ஊர்தொறும்
எறும்பியூர் மலையான் எங்கள் ஈசனே
நறும்பொன் நாண்மலர்க் கொன்றையும் நாகமும்
துறும்பு செஞ்சடைத் தூமதி வைத்து, வான்
உறும்பொன் மால்வரைப் பேதையோடு ஊர்தொறும்
எறும்பியூர் மலையான் எங்கள் ஈசனே
(6)
கறும்பி ஊர்வன ஐந்துள காயத்தில்
திறம்பி ஊர்வன மற்றும் பலவுள
குறும்பி ஊர்வதோர் கூட்டகத்திட்டெனை
எறும்பியூர் அரன் செய்த இயற்கையே
கறும்பி ஊர்வன ஐந்துள காயத்தில்
திறம்பி ஊர்வன மற்றும் பலவுள
குறும்பி ஊர்வதோர் கூட்டகத்திட்டெனை
எறும்பியூர் அரன் செய்த இயற்கையே
(7)
மறந்து மற்றிது பேரிடர் நாள்தொறும்
திறம்பி நீ நினையேல் மட நெஞ்சமே
புறஞ்செய் கோலக் குரம்பையில் இட்டெனை
எறும்பியூர்அரன் செய்த இயற்கையே
மறந்து மற்றிது பேரிடர் நாள்தொறும்
திறம்பி நீ நினையேல் மட நெஞ்சமே
புறஞ்செய் கோலக் குரம்பையில் இட்டெனை
எறும்பியூர்அரன் செய்த இயற்கையே
(8)
இன்பமும் பிறப்பும் இறப்பின்னொடு
துன்பமும் உடனே வைத்த சோதியான்
அன்பனே அரனே என்றரற்றுவார்க்கு
இன்பனாகும் எறும்பியூர் ஈசனே
இன்பமும் பிறப்பும் இறப்பின்னொடு
துன்பமும் உடனே வைத்த சோதியான்
அன்பனே அரனே என்றரற்றுவார்க்கு
இன்பனாகும் எறும்பியூர் ஈசனே
(9)
கண் நிறைந்த கன பவளத்திரள்
விண் நிறைந்த விரிசுடர்ச் சோதியான்
உள் நிறைந்துருவாய் உயிராயவன்
எண் நிறைந்த எறும்பியூர் ஈசனே
கண் நிறைந்த கன பவளத்திரள்
விண் நிறைந்த விரிசுடர்ச் சோதியான்
உள் நிறைந்துருவாய் உயிராயவன்
எண் நிறைந்த எறும்பியூர் ஈசனே
(10)
நிறங்கொள் மால்வரை ஊன்றியெடுத்தலும்
நறுங்குழல் மடவாள் நடுக்கெய்திட
மறங்கொள் வாளரக்கன் வலி வாட்டினான்
எறும்பியூர் மலை எம்இறை காண்மினே
நிறங்கொள் மால்வரை ஊன்றியெடுத்தலும்
நறுங்குழல் மடவாள் நடுக்கெய்திட
மறங்கொள் வாளரக்கன் வலி வாட்டினான்
எறும்பியூர் மலை எம்இறை காண்மினே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...