திருஇராமேச்சுரம் (இராமேஸ்வரம்) – சம்பந்தர் தேவாரம் (1):

<– திருஇராமேச்சுரம்

(1)
அலைவளர் தண்மதியோடயலே அடக்கி, உமை
முலைவளர் பாகம் முயங்கவல்ல முதல்வன், முனி
இலைவளர் தாழைகள் விம்மு கானல் இராமேச்சுரம்
தலைவளர் கோலநன் மாலையன் தானிருந்தாட்சியே
(2)
தேவியை வவ்விய தென்னிலங்கைத் தசமாமுகன்
பூவியலும் முடி பொன்றுவித்த பழி போயற
ஏவியலுஞ்சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்
மேவிய சிந்தையினார்கள் தம் மேல்வினை வீடுமே
(3)
மானன நோக்கியை தேவி தன்னை ஒரு மாயையால்
கானதில் வவ்விய காரரக்கன் உயிர் செற்றவன்
ஈனமிலாப் புகழ் அண்ணல் செய்த இராமேச்சுரம்
ஞானமும் நன்பொருளாகி நின்றதொரு நன்மையே
(4)
உரை உணராதவன், காமமென்னும் உறு வேட்கையான்
வரைபொரு தோளிறச் செற்றவில்லி மகிழ்ந்தேத்திய
விரைமருவும் கடலோத மல்கும் இராமேச்சுரத்து
அரை அரவாட நின்றாடல் பேணும் அம்மான் நல்லனே
(5)
ஊறுடை வெண்தலை கையிலேந்திப் பலஊர்தொறும்
வீறுடை மங்கையர் ஐயம் பெய்ய விறலார்ந்ததோர்
ஏறுடை வெல்கொடி எந்தை மேய இராமேச்சுரம்
பேறுடையான் பெயர் ஏத்து மாந்தர் பிணி பேருமே
(6)
அணையலை சூழ்கடல் அன்றடைத்து வழி செய்தவன்
பணையிலங்கும் முடி பத்திறுத்த பழி போக்கிய
இணையிலி என்றும் இருந்த கோயில் இராமேச்சுரம்
துணையிலி தூமலர்ப் பாதமேத்தத் துயர் நீங்குமே
(7)
சனிபுதன் ஞாயிறு வெள்ளி திங்கள் பல தீயன
முனிவது செய்துகந்தானை வென்ற வினை மூடிட
இனியருள் நல்கிடென்று அண்ணல் செய்த இராமேச்சுரம்
பனிமதி சூடி நின்றாட வல்ல பரமேட்டியே
(8)
பெருவரை அன்றெடுத்தேந்தினான் தன்பெயர் சாய்கெட
அருவரையால் அடர்த்தன்று நல்கி, அயன் மாலெனும்
இருவரும் நாடி நின்றேத்து கோயில் இராமேச்சுரத்து
ஒருவனுமே பலவாகி நின்றதொரு வண்ணமே
(9)
(10)
சாக்கியர், வன்சமண் கையர் மெய்யில் தடுமாற்றத்தார்
வாக்கியலும் உரை பற்றுவிட்டு மதிஒண்மையால்
ஏக்கியலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்
ஆக்கிய செல்வனை ஏத்திவாழ்மின் அருளாகவே
(11)
பகலவன் மீதுஇயங்காமைக் காத்த பதியோன் தனை
இகலழிவித்தவன் ஏத்து கோயில் இராமேச்சுரம்
புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் புந்தியால்
அகலிடமெங்கும் நின்றேத்த வல்லார்க்கில்லை அல்லலே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page