திருஇராமனதீச்சரம்:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
சங்கொளிர் முன்கையர் தம்மிடையே
அங்கிடு பலிகொளும்அவன், கோபப்
பொங்கரவு ஆடலோன், புவனியோங்க
எங்கு(ம்) மன் இராமனதீச்சரமே
(2)
சந்தநன் மலரணி தாழ்சடையன்
தந்த மதத்தவன் தாதையோ தான்
அந்தமில் பாடலோன், அழகன், நல்ல
எந்தவன் இராமனதீச்சரமே
(3)
தழைமயில் ஏறவன் தாதையோதான்
மழைபொழி சடையவன், மன்னு காதில்
குழையது விலங்கிய கோலமார்பின்
இழையவன் இராமனதீச்சரமே
(4)
சத்தியுள் ஆதியோர் தையல் பங்கன்
முத்தியதாகிய மூர்த்தியோ தான்
அத்திய கையினில் அழகு சூலம்
வைத்தவன் இராமனதீச்சரமே
(5)
தாழ்ந்த குழல் சடைமுடி அதன்மேல்
தோய்ந்த இளம்பிறை துலங்கு சென்னிப்
பாய்ந்த கங்கையொடு படஅரவம்
ஏய்ந்தவன் இராமனதீச்சரமே
(6)
சரிகுழல் இலங்கிய தையல் காணும்
பெரியவன், காளிதன் பெரியகூத்தை
அரியவன் ஆடலோன், அங்கையேந்தும்
எரியவன் இராமனதீச்சரமே
(7)
மாறிலா மாதொரு பங்கன், மேனி
நீறது ஆடலோன், நீள்சடைமேல்
ஆறது சூடுவான், அழகன், விடை
ஏறவன் இராமனதீச்சரமே
(8)
தடவரை அரக்கனைத் தலைநெரித்தோன்
பட அரவாட்டிய படர்சடையன்
நடமது ஆடலான், நான்மறைக்கும்
இடமவன் இராமனதீச்சரமே
(9)
தனமணி தையல்தன் பாகன் தன்னை
அனமணி அயன் அணி முடியும் காணான்
பனமணி வரவுஅரி பாதம் காணான்
இனமணி இராமனதீச்சரமே
(10)
தறிபோலாம் சமணர் சாக்கியர் சொல் கொளேல்
அறிவோரான் நாமம் அறிந்துரைமின்
மறி கையோன், தன்முடி மணியார் கங்கை
எறிபவன் இராமனதீச்சரமே
(11)

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page