(குறிப்பு: சுந்தரரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(சுந்தரர் தேவாரம்):
(1)
முந்தையூர் முதுகுன்றம், குரங்கணில் முட்டம்
சிந்தையூர் நன்று சென்றடைவான் திருவாரூர்
பந்தையூர், பழையாறு, பழனம், பைஞ்ஞீலி
எந்தையூர் எய்தமான் இடையாறு இடைமருதே
(2)
சுற்றுமூர் சுழியல், திருச்சோபுரம், தொண்டர்
ஒற்றுமூர் ஒற்றியூர், திருவூறல், ஒழியாப்
பெற்றமேறி பெண்பாதி இடம் பெண்ணைத் தெண்ணீர்
எற்றமூர் எய்தமான் இடையாறு இடைமருதே
(3)
கடங்களூர், திருக்காரிகரை, கயிலாயம்
விடங்களூர், திருவெண்ணி, அண்ணாமலை, வெய்ய
படங்கள் ஊர்கின்ற பாம்பரையான் பரஞ்சோதி
இடங்கொள் எய்தமான் இடையாறு இடைமருதே
(4)
கச்சையூர், காவம், கழுக்குன்றம், காரோணம்
பிச்சையூர் திரிவான் கடவூர், வடபேறூர்
கச்சியூர் கச்சி, சிக்கல், நெய்த்தானம், மிழலை
இச்சையூர் எய்தமான் இடையாறு இடைமருதே
(5)
நிறையனூர் நின்றியூர், கொடுங்குன்றம் அமர்ந்த
பிறையனூர், பெருமூர், பெரும்பற்றப் புலியூர்
மறையனூர் மறைக்காடு, வலஞ்சுழி, வாய்த்த
இறையனூர் எய்தமான் இடையாறு இடைமருதே
(6)
திங்களூர், திருஆதிரையான் பட்டினமூர்
நங்களூர் நறையூர், நனி நாலிசை நாலூர்
தங்களூர் தமிழான் என்று பாவிக்க வல்ல
எங்களூர் எய்தமான் இடையாறு இடைமருதே
(7)
கருக்க நஞ்சமுதுண்ட கல்லாலன், கொல்லேற்றன்
தருக்கருக்கனைச் செற்றுகந்தான், தன் முடிமேல்
எருக்க நாண்மலர் இண்டையும் மத்தமும் சூடி
இருக்குமூர் எய்தமான் இடையாறு இடைமருதே
(8)
தேசனூர் வினைதேய நின்றான் திருஆக்கூர்
பாசனூர் பரமேட்டி பவித்திர பாவ
நாசனூர் நனிபள்ளி, நள்ளாற்றை அமர்ந்த
ஈசனூர் எய்தமான் இடையாறு இடைமருதே
(9)
பேறனூர் பிறைச் சென்னியினான் பெருவேளூர்
தேறனூர், திருமாமகள்கோன் திருமாலோர்
கூறனூர், குரங்காடுதுறை, திருக்கோவல்
ஏறனூர் எய்தமான் இடையாறு இடைமருதே
(10)
ஊறு வாயினன் நாடிய வன்தொண்டன் ஊரன்
தேறுவார் சிந்தை தேறுமிடம் செங்கண் வெள்ளேறு
ஏறுவார் எய்தமான் இடையாறு இடைமருதைக்
கூறுவார் வினை எவ்விட மெய் குளிர்வாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...