(1)
துன்னம்பெய் கோவணமும் தோலும் உடையாடை
பின்னஞ்சடை மேலோர் பிளளைமதி சூடி
அன்னஞ்சேர் தண்கானல் ஆமாத்தூர் அம்மான் தன்
பொன்னங்கழல் பரவாப் பொக்கமும் பொக்கமே
(2)
கைம்மாவின் தோல் போர்த்த காபாலி, வானுலகில்
மும்மா மதிலெய்தான், முக்கணான் பேர்பாடி
அம்மாமலர்ச் சோலை ஆமாத்தூர் அம்மான்எம்
பெம்மான் என்றேத்தாதார் பேயரில் பேயரே
(3)
பாம்பரைச் சாத்தியோர் பண்டரங்கன், விண்டதோர்
தேம்பல் இளமதியம் சூடிய சென்னியான்
ஆம்பலம் பூம்பொய்கை ஆமாத்தூர் அம்மான் தன்
சாம்பல் அகலத்தார் சார்பல்லால் சார்பிலமே
(4)
கோணாகப் பேரல்குல் கோல் வளைக்கை மாதராள்
பூணாகம் பாகமாப் புல்கி அவளோடும்
ஆணாகம் காதல்செய் ஆமாத்தூர் அம்மானைக்
காணாத கண்ணெல்லாம் காணாத கண்களே
(5)
பாடல் நெறி நின்றான், பைங்கொன்றைத் தண்தாரே
சூடல் நெறி நின்றான், சூலஞ்சேர் கையினான்
ஆடல் நெறி நின்றான், ஆமாத்தூர் அம்மான் தன்
வேட நெறி நில்லா வேடமும் வேடமே
(6)
சாமவரை வில்லாகச் சந்தித்த வெங்கணையால்
காவல் மதிலெய்தான், கண்ணுடை நெற்றியான்
யாவரும் சென்றேத்தும் ஆமாத்தூர் அம்மான்அத்
தேவர் தலைவணங்கும் தேவர்க்கும் தேவனே
(7)
மாறாத வெங்கூற்றை மாற்றி மலைமகளை
வேறாக நில்லாத வேடமே காட்டினான்
ஆறாத தீயாடி ஆமாத்தூர் அம்மானைக்
கூறாத நாவெல்லாம் கூறாத நாக்களே
(8)
தாளால் அரக்கன்தோள் சாய்த்த தலைமகன் தன்
நாள்ஆதிரை என்றே நம்பன் தன் நாமத்தால்
ஆளானார் சென்றேத்தும் ஆமாத்தூர் அம்மானைக்
கேளாச் செவியெல்லாம் கேளாச் செவிகளே
(9)
புள்ளும் கமலமும் கைக்கொண்டார் தாமிருவர்
உள்ளும்அவன் பெருமை ஒப்பளக்கும் தன்மையதே
அள்ளல் விளைகழனி ஆமாத்தூர் அம்மான்எம்
வள்ளல் கழல்பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே
(10)
பிச்சை பிறர்பெய்யப் பின்சாரக் கோசாரக்
கொச்சை புலானாற ஈருரிவை போர்த்துகந்தான்
அச்சம்தன் மாதேவிக்கீந்தான் தன் ஆமாத்தூர்
நிச்சல் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே
(11)
ஆடல் அரவசைத்த ஆமாத்தூர் அம்மானைக்
கோடல் இரும்புறவில் கொச்சைவயத் தலைவன்
நாடலரிய சீர் ஞானசம்பந்தன் தன்
பாடல் இவை வல்லார்க்கில்லையாம் பாவமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...