தண்டலைநீணெறி:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
விரும்பும் திங்களும் கங்கையும் விம்மவே
சுரும்பும் தும்பியும் சூழ்சடையார்க்கிடம்
கரும்பும் செந்நெலும் காய்கமுகின் வளம்
நெருங்கும் தண்டலைநீணெறி காண்மினே
(2)
இகழும் காலன் இதயத்தும் என்னுளும்
திகழும் சேவடியான் திருந்தும்இடம்
புகழும் பூமகளும் புணர் பூசுரர்
நிகழும் தண்டலைநீணெறி காண்மினே
(3)
பரந்த நீலப் படரெரி வல்விடம்
கரந்த கண்டத்தினான் கருதும் இடம்
சுரந்த மேதி துறை படிந்தோடையில்
நிரந்த தண்டலைநீணெறி காண்மினே
(4)
தவந்த என்பும் தவளப் பொடியுமே
உவந்த மேனியினான் உறையும் இடம்
சிவந்த பொன்னும் செழுந்தரளங்களும்
நிவந்த தண்டலைநீணெறி காண்மினே
(5)
(6)
(7)
(8)
இலங்கை வேந்தன் இருபது தோளிற
விலங்கலில் அடர்த்தான் விரும்பும் இடம்
சலங்கொள் இப்பி தரளமும் சங்கமும்
நிலங்கொள் தண்டலைநீணெறி காண்மினே
(9)
கருவரு உந்தியின் நான்முகன் கண்ணனென்று
இருவரும் தெரியா ஒருவன் இடம்
செரு வருந்திய செம்பியன் கோச்செங்கண்
நிருபர் தண்டலை நீணெறி காண்மினே
(10
கலவு சீவரத்தார் கையிலுண்பவர்
குலவ மாட்டாக் குழகன் உறைவிடம்
சுலவு மாமதிலும் சுதை மாடமும்
நிலவு தண்டலைநீணெறி காண்மினே
(11)
நீற்றர் தண்டலை நீணெறி நாதனைத்
தோற்று மேன்மையர் தோணிபுரத்திறை
சாற்று ஞானசம்பந்தன் தமிழ்வலார்
மாற்றில் செல்வர் மறப்பர் பிறப்பையே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page