(1)
கரும்பமர் வில்லியைக் காய்ந்து, காதல் காரிகை மாட்டருளி
அரும்பமர் கொங்கை ஓர்பால் மகிழ்ந்த அற்புதம் செப்பரிதால்
பெரும்பகலே வந்தென் பெண்மை கொண்டு பேர்த்தவர் சேர்ந்தஇடம்
சுரும்பமர் சோலைகள் சூழ்ந்த செம்மைத் தோணிபுரம்தானே
(2)
கொங்கியல் பூங்குழல் கொவ்வைச் செவ்வாய்க் கோமள மாதுமையாள்
பங்கியலும் திருமேனியெங்கும் பால்வெள்ளை நீறணிந்து
சங்கியல் வெள்வளை சோர வந்தென் சாயல் கொண்டார் தமதூர்
துங்கியல் மாளிகை சூழ்ந்த செம்மைத் தோணிபுரம் தானே
(3)
மத்தக் களிற்றுரி போர்க்கக் கண்டு மாதுமை பேதுறலும்
சித்தம் தெளிய நின்றாடி ஏறூர் தீவண்ணர், சில்பலிக்கென்று
ஒத்தபடி வந்தென் உள்ளம் கொண்ட ஒருவர்க்கிடம் போலும்
துத்தநல் இன்னிசை வண்டு பாடும் தோணிபுரம் தானே
(4)
…
(5)
…
(6)
…
(7)
…
(8)
வள்ளலிருந்த மலையதனை வலஞ்செய்தல் வாய்மையென
உள்ளம் கொள்ளாது கொதித்தெழுந்தன்றெடுத்தோன் உரநெரிய
மெள்ள விரல்வைத்தென் உள்ளம் கொண்டார் மேவுமிடம் போலும்
துள்ளொலி வெள்ளத்தின் மேல்மிதந்த தோணிபுரம் தானே
(9)
வெல் பறவைக் கொடி மாலும், மற்றை விரைமலர் மேல்அயனும்
பல்பறவைப் படியாய் உயர்ந்தும், பன்றியதாய்ப் பணிந்தும்
செல்வற நீண்டெம் சிந்தை கொண்ட செல்வர்இடம் போலும்
தொல்பறவை சுமந்தோங்கு செம்மைத் தோணிபுரம் தானே
(10)
குண்டிகை பீலி தட்டோடு நின்று கோசரம் கொள்ளியரும்
மண்டை கையேந்தி மனங்கொள் கஞ்சி ஊணரும் வாய்மடிய
இண்டை புனைந்தெருதேறி வந்தென் எழில் கவர்ந்தார் இடமாம்
தொண்டிசை பாடலறாத தொன்மைத் தோணிபுரம் தானே
(11)
தூமரு மாளிகை மாடநீடு தோணிபுரத்திறையை
மாமறை நான்கினொடங்கமாறும் வல்லவன், வாய்மையினால்
நாமரு கேள்வி நலந்திகழும் ஞானசம்பந்தன் சொன்ன
பாமரு பாடல்கள் பத்தும் வல்லார் பார் முழுதாள்பவரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...