பொடியிலங்கும் திருமேனியாளர், புலி அதளினர்
அடியிலங்கும் கழலார்க்க ஆடும் அடிகள்இடம்
இடியிலங்கும் குரல் ஓதம்மல்க எறிவார் திரைக்
கடியிலங்கும் புனல் முத்தலைக்கும் கடற்காழியே
(2)
மயல்இலங்கும் துயர் மாசறுப்பான், அருந்தொண்டர்கள்
அயல்இலங்கப் பணிசெய்ய நின்ற அடிகள்இடம்
புயல்இலங்கும் கொடையாளர் வேதத்தொலி பொலியவே
கயல்இலங்கும் வயற்கழனி சூழும் கடற்காழியே
(3)
கூர்விளங்கும் திரிசூல வேலர், குழைக் காதினர்
மார்விளங்கும் புரிநூல்உகந்த மணவாளன் ஊர்
நேர் விலங்கல்அன திரைகள் மோத நெடுந்தாரை வாய்க்
கார்விலங்கல் எனக் கலந்தொழுகும் கடற்காழியே
(4)
குற்றமில்லார், குறைபாடு செய்வார் பழிதீர்ப்பவர்
பெற்றநல்ல கொடிமுன் உயர்த்த பெருமான்இடம்
மற்றுநல்லார், மனத்தால் இனியார், மறை கலையெலாம்
கற்றுநல்லார் பிழை தெரிந்தளிக்கும் கடற்காழியே
(5)
விருதிலங்கும் சரிதைத் தொழிலார், விரிசடையினார்
எருதிலங்கப் பொலிந்தேறும் எந்தைக்கிடமாவது
பெரிதிலங்கும் மறைகிளைஞர் ஓதப் பிழைகேட்டலால்
கருதுகிள்ளைக் குலம்தெரிந்து தீர்க்கும் கடற்காழியே
(6)
தோடிலங்கும் குழைக்காதர், வேதர், சுரும்பார் மலர்ப்
பீடிலங்கும் சடைப் பெருமையாளர்க்கிடமாவது
கோடிலங்கும் பெரும் பொழில்கள் மல்கப் பெருஞ்செந்நெலின்
காடிலங்கும் வயல்பயிலும் அந்தண் கடற்காழியே
(7)
மலையிலங்கும் சிலையாக வேகம்மதில் மூன்றெரித்து
அலையிலங்கும் புனல்கங்கை வைத்த அடிகட்கிடம்
இலையிலங்கும் மலர்க் கைதை கண்டல்வெறி விரவலால்
கலையிலங்கும் கணத்தினம் பொலியும் கடற்காழியே
(8)
முழுதிலங்கும் பெரும்பாருள் வாழும்முரண் இலங்கைக்கோன்
அழுதிரங்கச் சிரம்உரமொடுங்க அடர்த்து, ஆங்கவன்
தொழுதிரங்கத் துயர் தீர்த்துகந்தார்க்கு இடமாவது
கழுதும் புள்ளும் மதில் புறமதாரும் கடற்காழியே
(9)
பூவினானும், விரிபோதில் மல்கும் திருமகள்தனை
மேவினானும் வியந்தேத்த நீண்டார் அழலாய் நிறைந்து
ஓவிஅங்கே அவர்க்கருள் புரிந்த ஒருவர்க்கிடம்
காவியங்கண் மடமங்கையர் சேர் கடற்காழியே
(10)
உடைநவின்றார், உடை விட்டுழல்வார், இரும்தவத்தார்
முடைநவின்ற மொழி ஒழித்துகந்த முதல்வன் இடம்
மடைநவின்ற புனல்கெண்டை பாயும் வயல் மலிதரக்
கடைநவின்ற நெடுமாடம் ஓங்கும் கடற்காழியே
(11)
கருகு முந்நீர் திரை ஓதமாரும் கடற்காழியுள்
உரகமாரும் சடைஅடிகள் தம்பால் உணர்ந்துறுதலால்
பெருக மல்கும் புகழ்பேணும் தொண்டர்க்கிசையால் தமிழ்
விரகன் சொன்ன இவைபாடியாடக் கெடும் வினைகளே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...