(1)
பொங்கு வெண்புரி வளரும் பொற்புடை மார்பன், எம்பெருமான்
செங்கண் ஆடரவாட்டும் செல்வன்எம் சிவனுறை கோயில்
பங்கமில்பல மறைகள் வல்லவர் பத்தர்கள் பரவும்
தங்கு வெண்திரைக் கானல் தண்வயல் காழி நன்னகரே
(2)
தேவர் தானவர் பரந்து திண்வரை மால்கடல் நிறுவி
நாவதால் அமிர்துண்ண நயந்தவர் இரிந்திடக் கண்டு
ஆவஎன்று அருநஞ்சம் உண்டவன் அமர்தரும் மூதூர்
காவலார் மதில்சூழ்ந்த கடிபொழில் காழி நன்னகரே
(3)
கரியின் மாமுகமுடைய கணபதி தாதை, பல் பூதம்
திரிய இல்பலிக்கேகும் செழுஞ்சுடர் சேர்தரு மூதூர்
சரியின் முன்கை நன்மாதர் சதிபட மாநடமாடி
உரிய நாமங்களேத்தும் ஒலிபுனல் காழி நன்னகரே
(4)
சங்க வெண்குழைச் செவியன், தண்மதி சூடிய சென்னி
அங்கம் பூணென உடைய அப்பனுக்கழகிய ஊராம்
துங்க மாளிகை உயர்ந்த தொகுகொடி வானிடை மிடைந்து
வங்க வாண்மதி தடவு மணிபொழில் காழி நன்னகரே
(5)
மங்கை கூறமர் மெய்யான், மான்மறி ஏந்திய கையான்
எங்கள் ஈசன் என்றெழுவார் இடர்வினை கெடுப்பவற்கூராம்
சங்கையின்றி நன்னியம் தாஞ்செய்து தகுதியின் மிக்க
கங்கை நாடுயர் கீர்த்தி மறையவர் காழி நன்னகரே
(6)
நாறு கூவிள மத்த நாகமும் சூடிய நம்பன்
ஏறுமேறிய ஈசன் இருந்தினிதமர் தரு மூதூர்
நீறுபூசிய உருவர், நெஞ்சினுள் வஞ்சம் ஒன்றின்றித்
தேறுவார்கள் சென்றேத்தும் சீர்திகழ் காழி நன்னகரே
(7)
நடமதாடிய நாதன், நந்திதன் முழவிடைக் காட்டில்
இடம் அமர்ந்தொரு காலம் விரித்தறம் உரைத்தவற்கூராம்
இடமதா மறை பயில்வார் இருந்தவர் திருந்தியம் போதிக்
குடமதார் மணிமாடம் குலாவிய காழி நன்னகரே
(8)
கார்கொள் மேனிய அரக்கன் தன் கடுந்திறலினைக் கருதி
ஏர்கொள் மங்கையும் அஞ்ச எழில்மலை எடுத்தவன் நெரியச்
சீர்கொள் பாதத்தொர் விரலால் செறுத்தஎஞ் சிவனுறை கோயில்
தார்கொள் வண்டினம் சூழ்ந்த தண்வயல் காழி நன்னகரே
(9)
மாலு மாமலரானும் மருவிநின்று இகலிய மனத்தால்
பாலும் காண்பரிதாய பரஞ்சுடர் தன் பதியாகும்
சேலும் வாளையும் கயலும் செறிந்துதன் கிளையொடு மேய
ஆலும் சாலி நற்கதிர்கள் அணிவயல் காழி நன்னகரே
(10)
புத்தர் பொய்மிகு சமணர் பொலிகழல் அடியிணை காணும்
சித்தம் அற்றவர்க்கிலாமைத் திகழ்ந்த நற்செழுஞ்சுடர்க்கூராம்
சித்தரோடு நல்அமரர் செறிந்தநன் மாமலர் கொண்டு
முத்தனே அருள்என்று முறைமைசெய் காழிநன்னகரே
(11)
ஊழியானவை பலவும் ஒழித்திடும் காலத்தில்ஓங்கு
***
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...