(1)
உரவார் கலையின் கவிதைப் புலவர்க்கொரு நாளும்
கரவா வண்கைக் கற்றவர்சேரும் கலிக்காழி
அரவார் அரையா, அவுணர் புரமூன்றெரிசெய்த
சரவா என்பார் தத்துவஞானத் தலையாரே
(2)
மொய்சேர் வண்டுண் மும்மத நால்வாய் முரண்வேழக்
கைபோல் வாழை காய்குலை ஈனும் கலிக்காழி
மைசேர் கண்டத்தெண்தோள் முக்கண் மறையோனே
ஐயா என்பார்க்கல்லல்களான அடையாவே
(3)
இளகக் கமலத்தீன்கள் இயங்கும் கழிசூழக்
களகப் புரிசைக் கவினார் சாரும் கலிக்காழி
அளகத் திருநன்னுதலி பங்கா, அரனே என்று
உளகப்பாடும் அடியார்க்குறுநோய் அடையாவே
(4)
எண்ணார் முத்தமீன்று மரகதம் போல் காய்த்துக்
கண்ணார் கமுகு பவளம்பழுக்கும் கலிக்காழிப்
பெண்ணோர் பாகா, பித்தா, பிரானே என்பார்க்கு
நண்ணா வினைகள் நாள்தொறும் இன்பம் நணுகும்மே
(5)
மழையார்சாரல் செம்புனல் வந்தங்கடி வருடக்
கழையார் கரும்பு கண்வளர் சோலைக் கலிக்காழி
உழையார் கரவா, உமையாள் கணவா, ஒளிர்சங்கக்
குழையா என்று கூறவல்லார்கள் குணவோரே
(6)
குறியார் திரைகள் வரைகளினின்றும் கோட்டாறு
கறியார் கழி சம்பிரசம் கொடுக்கும் கலிக்காழி
வெறியார் கொன்றைச் சடையா விடையா என்பாரை
அறியா வினைகள், அருநோய் பாவம் அடையாவே
(7)
…
(8)
உலங்கொள் சங்கத்தார் கலியோதத் துதையுண்டு
கலங்கள் வந்து கார் வயலேறும் கலிக்காழி
இலங்கை மன்னன் தன்னை இடர் கண்டருள்செய்த
சலங்கொள் சென்னி மன்னா என்னத் தவமாமே
(9)
ஆவிக் கமலத்தன்னம் இயங்கும் கழிசூழக்
காவிக் கண்ணார் மங்கலம்ஓவாக் கலிக்காழிப்
பூவில் தோன்றும் புத்தேளொடு மாலவன் தானும்
மேவிப்பரவும் அரசே என்ன வினைபோமே
(10)
மலையார் மாட நீடுயர் இஞ்சி மஞ்சாரும்
கலையார் மதியம் சேர்தரும் அந்தண் கலிக்காழித்
தலைவா, சமணர் சாக்கியர்க்கென்றும் அறிவொண்ணா
நிலையா என்னத் தொல்வினையாய நில்லாவே
(11)
வடிகொள் வாவிச் செங்கழுநீரில் கொங்காடிக்
கடிகொள் தென்றல் முன்றினில் வைகும் கலிக்காழி
அடிகள் தம்மை அந்தமில் ஞானசம்பந்தன்
படிகொள் பாடல் வல்லவர் தம்மேல் பழிபோமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...