(1)
நல்லார், தீமேவும் தொழிலார், நால்வேதம்
சொல்லார், கேண்மையார் சுடர்பொற் கழலேத்த
வில்லால் புரஞ்செற்றான் மேவும் பதிபோலும்
கல்லார் மதில்சூழ்ந்த காழிந் நகர்தானே
(2)
துளி வண்தேன் பாயும் இதழி, தூமத்தம்
தெளி வெண்திங்கள், மாசுண நீர்திகழ் சென்னி
ஒளிவெண்தலை மாலை உகந்தான் ஊர்போலும்
களிவண்டு யாழ்செய்யும் காழிந் நகர்தானே
(3)
ஆலக் கோலத்தின் நஞ்சுண்டு அமுதத்தைச்
சாலத் தேவர்க்கீந்தளித்தான், தன்மையால்
பாலற்காய் நன்றும் பரிந்து பாதத்தால்
காலற் காய்ந்தான் ஊர் காழிந் நகர்தானே
(4)
…
(5)
…
(6)
…
(7)
…
(8)
இரவில் திரிவோர்கட்கிறை தோளிணை பத்தும்
நிரவிக் கரவாளை நேர்ந்தான் இடம்போலும்
பரவித் திரிவோர்க்கும் பால்நீறணிவோர்க்கும்
கரவில் தடக்கையார் காழிந் நகர்தானே
(9)
மாலும் பிரமனும் அறியா மாட்சியான்
தோலும் புரிநூலும் துதைந்த வரைமார்பன்
ஏலும் பதிபோலும் இரந்தோர்க்கெந்நாளும்
காலம் பகராதார் காழிந் நகர்தானே
(10)
தங்கையிட உண்பார், தாழ் சீவரத்தார்கள்
பெங்கை உணராதே பேணித் தொழுமின்கள்
மங்கையொரு பாகம் மகிழ்ந்தான் மலர்ச்சென்னிக்
கங்கை தரித்தான் ஊர் காழிந் நகர்தானே
(11)
வாசம் கமழ்காழி மதி செஞ்சடை வைத்த
ஈசன் நகர்தன்னை இணையில் சம்பந்தன்
பேசும் தமிழ்வல்லோர் பெருநீர் உலகத்துப்
பாசம் தனையற்றுப் பழியில் புகழாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...