(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(சம்பந்தர் தேவாரம்):
(1)
வானுலாவு மதி வந்துலவும் மதில் மாளிகை
தேனுலாவு மலர்ச்சோலை மல்கும் திகழ் சிக்கலுள்
வேனல் வேளை விழித்திட்ட வெண்ணெய்ப்பெருமான் அடி
ஞானமாக நினைவார் வினையாயின நையுமே
(2)
மடங்கொள் வாளை குதிகொள்ளும் மணமலர்ப் பொய்கைசூழ்
திடங்கொள் மாமறையோர்அவர் மல்கிய சிக்கலுள்
விடங்கொள் கண்டத்து வெண்ணெய்ப்பெருமான் அடிமேவியே
அடைந்து வாழும் அடியார்அவர் அல்லல் அறுப்பரே
(3)
நீல நெய்தல் நிலவிம் மலரும் சுனை நீடிய
சேலும்ஆலும் கழனிவ் வளம் மல்கிய சிக்கலுள்
வேலொண் கண்ணியினாளை ஓர்பாகன் வெண்ணெய்ப் பிரான்
பால வண்ணன் கழலேத்த நம்பாவம் பறையுமே
(4)
கந்த முந்தக் கைதை பூத்துக் கமழ்ந்து சேரும்பொழில்
செந்து வண்டு இன்னிசைப் பாடல் மல்கும் திகழ் சிக்கலுள்
வெந்த வெண்ணீற்றண்ணல் வெண்ணைய்ப் பிரான் விரையார்கழல்
சிந்தை செய்வார் வினையாயின தேய்வது திண்ணமே
(5)
மங்குல் தங்கும் மறையோர்கள் மாடத்தயலேமிகு
தெங்கு துங்கப்பொழில் செல்வ மல்கும் திகழ் சிக்கலுள்
வெங்கண் வெள்ளேறுடை வெண்ணெய்ப்பிரான் அடி மேவவே
தங்குமேல் சரதம் திரு நாளும் தகையுமே
(6)
வண்டிரைத்து மது விம்மிய மாமலர்ப் பொய்கைசூழ்
தெண்திரைக் கொள் புனல் வந்தொழுகும் வயல் சிக்கலுள்
விண்டிரைத்த மலரால்திகழ் வெண்ணெய்ப்பிரான் அடி
கண்டிரைத்து மனமே மதியாய் கதியாகவே
(7)
முன்னுமாடம் மதில் மூன்றுடனே எரியாய் விழத்
துன்னுவார் வெங்கணை ஒன்று செலுத்திய சோதியான்
செந்நெலாரும் வயல் சிக்கல் வெண்ணெய்ப் பெருமான்அடி
உன்னிநீட மனமே நினையாய் வினை ஓயவே
(8)
தெற்றலாகிய தென்இலங்கைக்கிறைவன் மலை
பற்றினான் முடிபத்தொடு தோள்கள் நெரியவே
செற்றதேவன் நம் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான் அடி
உற்றுநீ நினையாய் வினையாயின ஓயவே
(9)
மாலினோடு அருமாமறை வல்ல முனிவனும்
கோலினார், குறுகச் சிவன் சேவடி கோலியும்
சீலந்தாம் அறியார், திகழ் சிக்கல் வெண்ணெய்ப்பிரான்
பாலும் பன்மலர் தூவப் பறையும் நம் பாவமே
(10)
பட்டை நல்துவர் ஆடையினாரொடும், பாங்கிலாக்
கட்டமண் கழுக்கள் சொல்லினைக் கருதாதுநீர்
சிட்டன் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான் செழுமாமறைப்
பட்டன் சேவடியே பணிமின் பிணி போகவே
(11)
கந்தமார்பொழில் காழியுண் ஞானசம்பந்தன் நல்
செந்தண் பூம்பொழில் சிக்கல் வெண்ணெய்ப் பெருமான்அடிச்
சந்தமாச் சொன்ன செந்தமிழ் வல்லவர் வானிடை
வெந்த நீறணியும் பெருமான் அடி மேவரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...