கடுவாய்க்கரைப்புத்தூர்:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: அப்பர் சுவாமிகளால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(அப்பர் தேவாரம்):

(1)
ஒருத்தனை, மூவுலகொடு தேவர்க்கும்
அருத்தனை, அடியேன் மனத்துள்அமர்
கருத்தனைக், கடுவாய்ப் புனலாடிய
திருத்தனைப், புத்தூர்ச் சென்று கண்டுய்ந்தெனே
(2)
யாவரும் அறிதற்கரியான் தனை
மூவரின் முதலாகிய மூர்த்தியை
நாவின் நல்லுரையாகிய நாதனைத்
தேவனைப் புத்தூர்ச் சென்று கண்டுய்ந்தெனே
(3)
அன்பனை, அடியார் இடர் நீக்கியைச்
செம்பொனைத், திகழும் திருக்கச்சி!ஏ
கம்பனைக், கடுவாய்க்கரைத் தென்புத்தூர்
நம்பனைக் கண்டு நான்உய்யப் பெற்றெனே
(4)
மாதனத்தை, மாதேவனை, மாறிலாக்
கோதனத்தில் ஐந்தாடியை, வெண்குழைக்
காதனைக், கடுவாய்க்கரைத் தென்புத்தூர்
நாதனைக் கண்டு நான்உய்யப் பெற்றெனே
(5)
குண்டுபட்ட குற்றம் தவிர்த்தென்னை!ஆட்
கொண்டு நல்திறம் காட்டிய கூத்தனைக்
கண்டனைக், கடுவாய்க்கரைத் தென்புத்தூர்
அண்டனைக், கண்டு அருவினை அற்றெனே
(6)
பந்த பாசம் அறுத்தெனை ஆட்கொண்ட
மைந்தனை, மணவாளனை, மாமலர்க்
கந்தநீர்க் கடுவாய்க்கரைத் தென்புத்தூர்
எந்தை ஈசனைக் கண்டு இனிதாயிற்றே
(7)
உம்பரானை உருத்திர மூர்த்தியை
அம்பரானை அமலனை ஆதியைக்
கம்புநீர்க் கடுவாய்க்கரைத் தென்புத்தூர்
எம்பிரானைக் கண்டு இன்பமதாயிற்றே
(8)
மாசார் பாச மயக்கறுவித்து, எனுள்
நேசமாகிய நித்த மணாளனைப்
பூசநீர்க் கடுவாய்க்கரைத் தென்புத்தூர்
ஈசனே என இன்பமதாயிற்றே
(9)
இடுவார் இட்ட கவளம் கவர்ந்திரு
கடுவாய் இட்டவர் கட்டுரை கொள்ளாதே
கடுவாய்த் தென்கரைப்புத்தூர் அடிகட்கு!ஆட்
படவே பெற்றுநான் பாக்கியம் செய்தெனே
(10)
அரக்கன் ஆற்றல் அழித்தவன், பாடல்கேட்டு
இரக்கமாகி அருள்புரி ஈசனைத்
திரைக்கொள் நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
இருக்கு நாதனைக் காணப் பெற்றுய்ந்தெனே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page