இரும்பூளை:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
சீரார் கழலே தொழுவீர் இரிதுசெப்பீர்
வாரார் முலை மங்கையொடும் உடனாகி
ஏரார் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
காரார் கடல் நஞ்சமுதுண்ட கருத்தே
(2)
தொழலார் கழலேதொழு தொண்டர்கள் சொல்லீர்
குழலார் மொழிக்கோல் வளையோடு உடனாகி
எழிலார் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
கழல்தான் கரிகானிடை ஆடு கருத்தே
(3)
அன்பால் அடிகை தொழுவீர் அறியீரே
மின்போன் மருங்குல் மடவாளொடு மேவி
இன்பாய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
பொன்போல் சடையில் புனல்வைத்த பொருளே
(4)
நச்சித் தொழுவீர்கள் நமக்கிது சொல்லீர்
கச்சிப் பொலி காமக்கொடி உடன்கூடி
இச்சித்து இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
உச்சித் தலையில் பலிகொண்டுழல் ஊணே
(5)
சுற்றார்ந்தடியே தொழுவீர் இதுசொல்லீர்
நற்றாழ் குழல் நங்கையொடும் உடனாகி
எற்றே இரும்பூளை இடங்கொண்ட ஈசன்
புற்றாடரவோடு என்பு பூண்ட பொருளே
(6)
தோடார் மலர்தூய்த் தொழு தொண்டர்கள் சொல்லீர்
சேடார் குழல் சேயிழையோடு உடனாகி
ஈடாய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
காடார் கடுவேடுவன்ஆன கருத்தே
(7)
(8)
ஒருக்கும் மனத்து அன்பருள்ளீர் இதுசொல்லீர்
பருக்கை மதவேழம் உரித்து உமையோடும்
இருக்கை இரும்பூளை இடங்கொண்ட ஈசன்
அரக்கன் உரம் தீர்த்தருள் ஆக்கியவாறே
(9)
துயராயின நீங்கித்தொழும் தொண்டர் சொல்லீர்
கயலார் கருங்கண்ணியொடும் உடனாகி
இயல்பாய் இரும்பூளை இடங்கொண் ஈசன்
முயல்வார் இருவர்க்கெரியாகிய மொய்ம்பே
(10)
துணைநன் மலர்தூய்த் தொழும் தொண்டர்கள் சொல்லீர்
பணை மென்முலைப் பார்ப்பதியோடு உடனாகி
இணையில் இரும்பூளை இடங்கொண்ட ஈசன்
அணைவில் சமண் சாக்கியம் ஆக்கியவாறே
(11)
எந்தை இரும்பூளை இடங்கொண்ட ஈசன்
சந்தம் பயில் சண்பையுண் ஞானசம்பந்தன்
செந்தண்தமிழ் செப்பிய பத்திவை வல்லார்
பந்தம் அறுத்தோங்குவர் பான்மையினாலே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page