(குறிப்பு: அப்பர் சுவாமிகளால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(அப்பர் தேவாரம்):
(1)
மறையும் ஓதுவர், மான்மறிக் கையினர்
கறைகொள் கண்டம்உடைய கபாலியார்
துறையும் போகுவர், தூய வெண்ணீற்றினர்
பிறையும் சூடுவர் பேரெயிலாளரே
(2)
கணக்கிலாரையும், கற்று வல்லாரையும்
வணக்கிலா நெறி கண்டு கொண்டாரையும்
தணக்குவார், தணிப்பார் எப்பொருளையும்
பிணக்குவார் அவர் பேரெயிலாளரே
(3)
சொரிவிப்பார் மழை, சூழ் கதிர்த் திங்களை
விரிவிப்பார், வெயில்பட்ட விளங்கொளி
எரிவிப்பார், தணிப்பார் எப்பொருளையும்
பிரிவிப்பார் அவர் பேரெயிலாளரே
(4)
செறுவிப்பார் சிலையால் மதில், தீர்த்தங்கள்
உறுவிப்பார், பல பத்தர்கள் ஊழ்வினை
அறுவிப்பார், அதுவன்றியும் நல்வினை
பெறுவிப்பார் அவர் பேரெயிலாளரே
(5)
மற்றையார் அறியார், மழுவாளினார்
பற்றி ஆட்டியோர் ஐந்தலை பாம்பரைச்
சுற்றியார் அவர், தூநெறியால் மிகு
பெற்றியார் அவர் பேரெயிலாளரே
(6)
திருக்கு வார்குழல் செல்வன சேவடி
இருக்கு வாய்மொழியால் தனைஏத்துவார்
சுருக்குவார் துயர் தோற்றங்கள் ஆற்றறப்
பெருக்குவார் அவர் பேரெயிலாளரே
(7)
முன்னையார், மயிலூர்தி முருகவேள்
தன்ஐயார், எனின் தானோர் தலைமகன்
என்னை ஆளும் இறையவன் எம்பிரான்
பின்னையார் அவர் பேரெயிலாளரே
(8)
உழைத்தும் துள்ளியும் உள்ளத்துளேஉரு
இழைத்தும் எந்தை பிரான் என்றிராப்பகல்
அழைக்கும் அன்பினராய அடியவர்
பிழைப்பு நீக்குவர் பேரெயிலாளரே
(9)
நீருலா நிமிர் புன்சடையா எனா
ஏருலா அநங்கன் திறல் வாட்டிய
வாருலா வனமென் முலையாளொடும்
பேருளார்அவர் பேரெயிலாளரே
(10)
பாணியார் படுதம் பெயர்ந்தாடுவர்
தூணியார் விசயற்கருள் செய்தவர்
மாணியாய் மண்ணளந்தவன் நான்முகன்
பேணியார்அவர் பேரெயிலாளரே
(11)
மதத்த வாளரக்கன் மணிப் புட்பகம்
சிதைக்கவே திருமாமலைக் கீழ்ப்புக்குப்
பதைத்தங்காத்தெடுத்தான் பத்து நீள்முடி
பிதக்க ஊன்றிய பேரெயிலாளரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...