(குறிப்பு: அப்பர் சுவாமிகளால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(அப்பர் தேவாரம்):
(1)
கருவாகிக் கண்ணுதலாய் நின்றான் தன்னைக்
கமலத்தோன் தலையரிந்த காபாலிய்யை
உருவார்ந்த மலைமகளோர் பாகத்தானை
உணர்வெலாம் ஆனானை, ஓசையாகி
வருவானை, வலஞ்சுழியெம் பெருமான் தன்னை
மறைக்காடும் ஆவடுதண்துறையும் மேய
திருவானைத், தென் பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே
(2)
உரித்தானைக் களிறதன்தோல் போர்வையாக
உடையானை உடைபுலியின் அதளேயாகத்
தரித்தானைச் சடையதன்மேல் கங்கை, அங்கைத்
தழலுருவை, விடம்அமுதா உண்டதெல்லாம்
பரித்தானைப், பவளமால் வரை அன்னானைப்
பாம்பணையான் தனக்கு அன்றங்காழி நல்கிச்
சிரித்தானைத், தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே
(3)
உருமூன்றாய் உணர்வின்கண் ஒன்றானானை
ஓங்கார மெய்ப்பொருளை, உடம்பின் உள்ளால்
கருஈன்ற வெங்களவை அறிவான் தன்னைக்
காலனைத்தன் கழலடியால் காய்ந்து மாணிக்கு
அருளீன்ற ஆரமுதை, அமரர் கோனை
அள்ளூறி எம்பெருமான் என்பார்க்கென்றும்
திருவீன்ற தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே
(4)
பார்முழுதாய் விசும்பாகிப் பாதாளமாம்
பரம்பரனைச் சுரும்பமரும் குழலாள் பாகத்து
ஆரமுதாம் அணிதில்லைக் கூத்தன் தன்னை
வாட்போக்கி அம்மானை எம்மானென்று
வாரமதாம் அடியார்க்கு வாரமாகி
வஞ்சனை செய்வார்க்கென்றும் வஞ்சனாகும்
சீரரசைத், தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே
(5)
வரையார்ந்த மடமங்கை பங்கன் தன்னை
வானவர்க்கும் வானவனை, மணியை, முத்தை
அரையார்ந்த புலித்தோல்மேல் அரவம் ஆர்த்த
அம்மானைத், தம்மானை, அடியார்க்கென்றும்
புரையார்ந்த கோவணத்தெம் புனிதன் தன்னைப்
பூந்துருத்தி மேயானைப், புகலூரானைத்
திரையார்ந்த தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே
(6)
விரிந்தானைக் குவிந்தானை, வேத வித்தை
வியன் பிறப்போடிறப்பாகி நின்றான் தன்னை
அரிந்தானைச் சலந்தரன் தன் உடலம் வேறா
ஆழ்கடல் நஞ்சுண்டிமையோர் எல்லாம் உய்யப்
பரிந்தானைப், பல்லசுரர் புரங்கள் மூன்றும்
பாழ்படுப்பான் சிலைமலைநாண் ஏற்றி அம்பு
தெரிந்தானைத், தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே
(7)
பொல்லாத என்னழுக்கில் புகுவான் என்னைப்
புறம்புறமே சோதித்த புனிதன் தன்னை
எல்லாரும் தன்னை இகழ அந்நாள்
இடுபலிஎன்றகம் திரியும் எம்பிரானைச்
சொல்லாதார் அவர்தம்மைச் சொல்லாதானைத்
தொடர்ந்துதன் பொன்னடியே பேணுவாரைச்
செல்லாத நெறிசெலுத்த வல்லான் தன்னைத்
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே
(8)
ஐந்தலைய நாகஅணைக் கிடந்த மாலோடு
அயன்தேடி நாடரிய அம்மான் தன்னைப்
பந்தணவு மெல்விரலாள் பாகத்தானைப்
பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான் தன்னைப்
பொந்துடைய வெண்தலையில் பலிகொள்வானைப்
பூவணமும் புறம்பயமும் பொருந்தினானைச்
சிந்திய வெந்தீவினைகள் தீர்ப்பான் தன்னைத்
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே
(9)
கையிலுண்டு உழல்வாரும் சாக்கியரும்
கல்லாத வன்மூடர்க்கல்லாதானைப்
பொய்யிலாத அவர்க்கென்றும் பொய்யிலானைப்
பூண்நாகம் நாணாகப் பொருப்பு வில்லாக்
கையினார் அம்பெரிகால் ஈர்க்குக் கோலாக்
கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய் வீழ்த்த
செய்யினார் தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...