பாருருவாய பிறப்பற வேண்டும்
பத்திமையும் பெற வேண்டும்
சீருருவாய சிவபெருமானே
செங்கமல மலர்போல்
ஆருருவாய என்ஆரமுதே, உன்
அடியவர் தொகைநடுவே
ஓருருவாய நின் திருவருள் காட்டி
என்னையும் உய்யக் கொண்டருளே
(2)
உரியேன் அல்லேன் உனக்கடிமை உன்னைப் பிரிந்திங்கொரு பொழுதுந்
தரியேன் நாயேன் – இன்னதென்றறியேன் சங்கரா – கருணையினாற்
பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்றுன் பெய்கழல் அடிகாட்டிப்
பிரியேன் என்றென்றருளிய அருளும் பொய்யோ எங்கள் பெருமானே
(3)
என்பேஉருக நின்அருள் அளித்துன்
இணைமலர் அடிகாட்டி
முன்பே என்னை ஆண்டு கொண்ட
முனிவா – முனிவர் முழுமுதலே
இன்பே அருளி எனையுருக்கி
உயிருண்கின்ற எம்மானே
நண்பே அருளாய் ‘என்னுயிர்
நாதா’ நின்னருள் நாணாமே
(4)
பத்திலனேனும் பணிந்திலனேனும், உன் உயர்ந்த பைங்கழல் காணப்
பித்திலனேனும், பிதற்றிலனேனும், பிறப்பறுப்பாய்எம் பெருமானே
முத்தனையானே மணியனையானே முதல்வனே முறையோ !என்
றெத்தனையானும் யான் தொடர்ந்துன்னை இனிப் பிரிந்தாற்றேனே
(5)
காணுமதொழிந்தேன், நின்திருப்பாதங்
கண்டுகண் களிகூரப்
பேணுமதொழிந்தேன், பிதற்றுமதொழிந்தேன்
பின்னைஎம் பெருமானே
தாணுவே – அழிந்தேன் – நின்னினைந்துருகுந்
தன்மைஎன் புன்மைகளாற்
காணுமதொழிந்தேன், நீயினி வரினுங்
காணவும் நாணுவனே
(6)
பால் திருநீற்றெம் பரமனைப்
பரங் கருணையோடும் எதிர்ந்து
தோற்றி – மெய்யடியார்க்கருள்துறை அளிக்குஞ்
சோதியை, நீதியிலேன்
போற்றி என்அமுதே என நினைந்தேத்திப்
புகழ்ந்தழைத்தலறி என்னுள்ளே
ஆற்றுவனாக – உடையவனே – எனை
ஆவ என்றருளாயே
